15 வருடங்களுக்கு பிறகும் மீண்டும் தளபதியுடன் கை கோர்த்த த்ரிஷா.! தரமான சம்பவம் இருக்கு.!

தளபதி 67 படத்திற்காக நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ், திரிஷா ஆகியோர் காஷ்மீருக்கு செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருக்கும் வீடியோ தற்போதைய இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் சுமார் இதுவரை சுமார் 66 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். 1992 ஆம் ஆண்டு தனது தந்தை இயக்கத்தில் முதன்முறையாக நடித்த ஆரம்பித்த அவர், இன்று வரை சுமார் 66 படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவர் மிகப் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து இருக்கிறார். தளபதி 67 என்று அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்களுக்கு முன்பு துவங்கியிருக்கிறது. நேற்று படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதில் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்து இருந்தது. மேலும் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

15 வருடங்களுக்கு பிறகும் மீண்டும் தளபதியுடன் கை கோர்த்த த்ரிஷா.! தரமான சம்பவம் இருக்கு.! 1
அதன்படி கேஜிஎப் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருப்பதை இன்று உறுதி செய்து இருக்கிறது தயாரிப்பு நிறுவனம். மேலும் நடிகை பிரியா ஆனந்த், த்ரிஷா ஆகியோரும் இந்த படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், பிரியா ஆனந்த் நடிக்க இருப்பதை தற்போது தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. மேலும் நடிகை திரிஷா, இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஷ்கின் ஆகியோரும் லோகேஷ் கனகராஜின் யூனிவர்சில் இணைய இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை புது அப்டேட்டை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இதனால் தளபதி ரசிகர்கள் பெரிய அளவில் உற்சாகத்தில் இருக்கின்றனர். சமீபத்தில் மைக்கேல் திரைப்பட விழாவில் பேசியிருந்த லோகேஷ் கனகராஜ் பிப்ரவரி ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய தினங்களில் தளபதி 67 படம் குறித்து அறிவிப்பு ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என்று பேசி இருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "எனக்கு வேற வழி தெரில ஆத்தா!" நெல்சன் உடம்போடு தன் தலையை Photoshop செய்துகொண்ட விக்னேஷ் சிவன்

15 வருடங்களுக்கு பிறகும் மீண்டும் தளபதியுடன் கை கோர்த்த த்ரிஷா.! தரமான சம்பவம் இருக்கு.! 3
மேலும் விக்ரம் படம் வெளியான போது ஒரு குட்டி டீசருடன் “ஆரம்பிக்கலாங்களா”என்று படத்தை ஆரம்பித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அதுபோல வரும் நாட்களில் குட்டி டீசருடன் தளபதி 67 குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1, 2, 3 என்று தேதி கொடுத்திருப்பதால் இந்த தேதிகளில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் சென்னையில் “அறிவிப்பு டீசருக்கான” படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும், விரைவில் அவர்கள் படப்பிடிப்பை துவங்க காஷ்மீருக்கு செல்ல இருப்பதாகவும் தொடர்ந்து இணையத்தில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ், திரிஷா ஆகியோருடன் இணைந்து தளபதி விமான நிலையத்தில் செல்லும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment