தனது மகள் ரயான் திருமணத்தை பார்த்து பார்த்து நடத்தி வைத்துள்ளார் ராதிகா சரத்குமார். 6 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற அந்த திருமணத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா. இலங்கையில் 1963இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷாவும், திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய தந்தையின் மூத்த மனைவிக்கு பிறந்த மகன் ஆவார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராதிகா நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். முன்னதாக, ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் முறை மலையாள நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு. ரயானுக்கு மிதுன் என்பவருடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சென்னையில் வைத்து நடைபெற்ற இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போது ரயானுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் ராதிகா தனது பேரப் பிள்ளைகளுடன் நேரம் செலவிடும் வீடியோக்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ராதிகா மகளின் திருமணம் வைரலாகத் தொடங்கியுள்ளது. அந்த வீடியோவை இதுவரை சுமார் 15 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். நீங்களும் அந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!