அயோ தங்கத்துக்கு எவ்ளோ திருஷ்டி இருக்கு.! வீட்டுக்கு வந்த அசீமை வழி நெடுக திருஷ்டி எடுத்த மக்கள்.!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய அசீமை அவருடைய தெருவில் வசிக்கும் மக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்று இருக்கும் வீடியோவை அசீமே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்கிற நாடகத்தின் மூலமாக சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் அசீம். இவர் அதற்கு முன்பாக சில செய்தி தொலைக்காட்சிகளில் சினிமா செய்திகளை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே, சின்னத்திரை பக்கம் தலை காட்டத் தொடங்கினார். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு, பகல் நிலவு என்னும் சீரியலின் மூலமாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுடன் இணைந்து நடித்தார். இந்த சீரியலுக்கு பின்னர் இவர்கள் இருவருக்குமே ரசிகர் பட்டாளம் பெருகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அயோ தங்கத்துக்கு எவ்ளோ திருஷ்டி இருக்கு.! வீட்டுக்கு வந்த அசீமை வழி நெடுக திருஷ்டி எடுத்த மக்கள்.! 1

விளம்பரம்

அதன் பின்னர் அசீம் கடைக்குட்டி சிங்கம் என்கிற நாடகத்தில் நடித்தார்் இந்த நாடகம் சில காரணங்களால் விரைந்து முடிக்கப்பட்டதால், பின்னர் விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்றார். அங்கும் சில நாடகங்களில் நடித்து வந்த அவர், பின்னாளில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்கிற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த சீரியலுக்கு பின்னர் அவர் எந்த நாடகத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 4ல் ஷிவானி நாராயணன் இருந்தபோதே இவரும் வைல்ட் கார்டு என்டியாக கலந்து கொள்வார் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஏனெனில் சிவானியும் அசீமும் காதலித்து வருவதாக வதந்தி அப்போது கிளம்பி இருந்த நிலையில் அவர் பிக் பாஸில் கலந்து கொள்வார் என்ற பரபரப்பு எழுந்தது. ஆனால் அவர் அந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை. சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்தார் அசீம்.

தொடர்புடையவை  ஐஸ்வர்யா பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் மஹா.! கெளதம் ஐஸ்வர்யா திருமணம் நின்று போகுமா?

அயோ தங்கத்துக்கு எவ்ளோ திருஷ்டி இருக்கு.! வீட்டுக்கு வந்த அசீமை வழி நெடுக திருஷ்டி எடுத்த மக்கள்.! 3

விளம்பரம்

என்ன சண்டை சச்சரவு இருந்தாலும் அசீமை வெற்றி பெற வைத்திருக்கின்றனர் தமிழக மக்கள். இந்த நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் இரண்டு வாரங்களாக எந்த தொலைக்காட்சிகளுக்கும் பேட்டியளிக்காமல் இருந்து வந்த அவர் சமீபத்தில் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்து வருகிறார். இந்த நிலையில் அவரை பொது மக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்று இருக்கும் வீடியோவை அசீமே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும். Watch the Below Video.! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment