நரைத்த தலை மற்றும் தாடி மீசையுடன் ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போயுள்ளார் ஜெயம் ரவி. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவரின் சமீத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது. நம்ம அருள் மொழி வர்மனுக்கு என்ன ஆச்சு என்று அவரது ரசிகர்கள் சோகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். 2003 ஆம் ஆண்டு வெளியான “ஜெயம்” என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். இவரது தந்தை ஒரு தயாரிப்பாளர் மற்றும் இவரது அண்ணன் ஒரு இயக்குனர் ஆவார். எனவே அந்த பிரபலத்தைக் கொண்டு திரைத்துறையில் அறிமுகமான போதிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் ஜெயம் ரவி. ஜெயம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தனி ஒருவன், கோமாளி போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் சுமார் 20 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதற்காகவே இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து அசத்தியிருந்தார் ஜெயம் ரவி. இந்த படத்திற்கு பின்னால் ஜெயம் ரவியின் புகழ் மேலும் பெருகியது. ஜெயம் ரவி தற்போது அகிலன், இறைவன், பொன்னியின் செல்வன் பாகம் 2 மற்றும் சைரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் அனைத்தும் அடுத்தடுத்ததாக ரிலீசாக இருக்கிறது. இந்த படங்கள் குறித்து அறிவிப்பு தற்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். முதல் மகன் பெயர் ஆரவ். இரண்டாவது மகன் பெயர் அயான். இதில் முதல் மகன் ஆரவ் டிக் டிக் டிக் என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று காலை முதல் இணையத்தில் ஒரு புகைப்படம் உலா வந்து கொண்டிருக்கிறது. அதில் ஜெயம் ரவி நரைத்த தாடி மீசை மற்றும் தலை முடியுடன் ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போயுள்ளார். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவரின் சமீத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது. நம்ம அருள் மொழி வர்மனுக்கு என்ன ஆச்சு என்று அவரது ரசிகர்கள் சோகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலரோ ஜெயம் ரவியை பார்க்கும் போது தல அஜித்தை பார்ப்பது போலவே உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram