மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட தளபதி 67 படத்தின் பட பூஜை என்று தொடங்கி இருக்கிறது. இந்த பட பூஜையில் படத்தில் நடிக்கும் திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், நடிகர் அர்ஜுன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகிய பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. தமிழ் உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர் தளபதி விஜய். இவர் 66 படங்களில் நடித்த முடித்து தற்போது 67வது படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தை பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தை 7 கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து நேற்று ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாகி இருந்த நிலையில் தற்போது படத்தின் பூஜை துவங்கி இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தில் மிகப் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் படம் ஒன்று 500 கோடி வசூலை பெற்றிருந்தது. இந்த வெற்றிக்குப் பின்னர் அவர் விஜய் வைத்து ஒரு படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. மேலும் லோகேஷ் ஏற்கனவே மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் பணியாற்றி இருந்தால் இந்த அறிவிப்பு எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார் லோகேஷ். அதில் வாரிசு படத்தின் அப்டேட்டுகள் பிப்ரவரி ஒன்று இரண்டு மூன்று ஆகிய நாட்களில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் என்று பேசியிருந்தார். நேற்று ஜனவரி 31 என்பதால் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாகி கொண்டிருந்தது. அதன்படி கேஜிஎப் படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் இந்த படத்திலும் கமிட்டாகி இருக்கிறார்.



மேலும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கதாநாயகியாக நடிகை திரிஷா கமிட்டாக இருக்கிறார். இவர்களுடன் இணைந்து பிரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மன்சூரலிகான் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் பட பூஜை இன்று பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வெளியான சில நிமிடங்களிலேயே 5 லட்சம் பார்வையாளர்களை அதிகமாக பெற்றிருக்கிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Sony Music South