பிக்பாஸ் சீசன் 3 பிரபலம் கவின் நடித்துள்ள, டாடா படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கவின் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையில் நடித்தார். இவருக்கு திருப்பு முனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது சரவணன் மீனாட்சி தான். இந்த நாடகத்தில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து பல இளம் ரசிகைகளின் மனதை கொள்ளையடித்தார் கவின். அதன் பின்னர் சில காலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். பின்னர் இவருக்கு 2012ம் ஆண்டு வெளியான பீட்சா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இவர் நட்புனா என்னனு தெரியுமா? என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் லிஃப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். தற்போது டாடா மற்றும் ஊர்க்குருவி ஆகிய இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையே இவருக்கு 2019ம் ஆண்டு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 5 லட்சத்துடன் பாதியிலேயே வீட்டில் இருந்து வெளியேறினார் கவின். கவினுக்கும், லாஸ்லியாவுக்கும் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது காதல் மலர்ந்தது. ஆனால் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் படங்களில் நடிப்பதை மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். கவின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கணேஷ் கே.பாபு இயக்கி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்து இருந்த அபர்ணாதாஸ் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் பாக்யராஜ், விடிவி கணேஷ் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் என்பவர் இசையமைக்க, எழிலரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட இருக்கிறது. தற்போது இந்ம படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ட்ரைலரை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: think music india