வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தில் முதல் முறையாக இளையராஜா இசையில் தனுஷ் பாடியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. அசுரன் படம் கொடுத்த வெற்றிக்குப் பின்னர் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் சூரி நடித்து வருகிறார். சூரி ஹீரோவாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குறைந்த பட்ஜெட்டில் ஒரே பாகமாக தொடங்கிய இந்த படம், கதையில் ஏற்பட்ட பல மாறுதல் காரணமாக இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. இந்த படத்தை ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி சமீபத்தில் தொடங்கி இருந்தார்.அந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவிற்கு முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தற்போது படத்தின் முதல் பாடலான உன்னோடு நடந்த என்கிற பாடல் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. இந்தப் பாடலை சுகா என்பவர் எழுதியிருக்கிறார். பாடலை தனுஷ் மற்றும் அனன்யா பட் ஆகியோர் இணைந்து பாடி இருக்கின்றனர். இளையராஜா இசையமைக்க முதன்முதலாக அவருடைய இசையில் தனுஷ் இந்த பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் தனுஷிற்கு எப்படி பாட வேண்டும் என்று இளையராஜா கற்றுக் கொடுக்கிறார் அவர்களுடன் வெற்றிமாறனும் இருக்கிறார்.

தனுஷ் மற்றும் வெற்றி மாறனிடம் உங்கள் முகம் தெரிய வேண்டும்.அதனால் மாஸ்கை கழட்டுங்கள் என்று இளையராஜா கூறுகிறார். அதற்கு தனுஷ் இல்லை எனக்கு சளி பிடித்திருக்கிறது உங்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காகத்தான் மாஸ்க் போட்டு இருக்கிறேன் என்று பதிலளிக்கிறார். அதற்கு பரவாயில்லை உங்களிடமிருந்து ஏதாவது வாங்கணும் இல்லையா என கிண்டலாக பதிலளிக்க வெற்றிமாறன் தனுஷ் ஆகிய இருவரும் சிரிக்கின்றனர். பிறகு தனுஷுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க அதை அப்படியே அச்சு அசலாக அருமையாக பாடுகிறார் தனுஷ். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: RS Infotainment