துபாயில் மகள் கணவருடன் விடுமுறையை கழிக்கும் குஷ்பூ.! அழகான குடும்பம், சுத்தி போடுங்கப்பா.!

நடிகை குஷ்பூ தனது மகள் மற்றும் கணவருடன் இணைந்து துபாயில் விடுமுறையை கழித்து வருகிறார். அந்த புகைப்படங்களை தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவரது மூத்த மகள் அனந்திதா பார்ப்பதற்கு அப்படியே குஷ்பூவை உரித்து வைத்திருக்கிறார். தமிழ் திரைப்படத்தில் 90களில் முன்னணி நடிகையாக நடிகை வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. 1980 களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கை தொடங்கிய இவர் முதன்முதலாக 1989 ஆம் ஆண்டு “வருஷம் 16” என்கிற தமிழ் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

துபாயில் மகள் கணவருடன் விடுமுறையை கழிக்கும் குஷ்பூ.! அழகான குடும்பம், சுத்தி போடுங்கப்பா.! 1

விளம்பரம்

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 1990களில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களிலும், சின்னத்திரைகளிலும் நடித்து வருகிறார் குஷ்பூ. மேலும் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தனது கணவர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் அல்லது இயக்கும் படங்களை “அவ்னி சினிமாஸ்” என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலமும் தயாரித்து வருகிறார்.

தொடர்புடையவை  படம் பாக்க வரவன் எல்லாம் முட்டாள்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? பிரின்ஸ் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை

துபாயில் மகள் கணவருடன் விடுமுறையை கழிக்கும் குஷ்பூ.! அழகான குடும்பம், சுத்தி போடுங்கப்பா.! 3
திரை திரைக்கு வந்து குறுகிய காலத்திலேயே ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களாக இருந்தவர்களும் நடித்து விட்டார். இவர் நடிப்பில் குறிப்பிட்ட சில படங்களாக சின்ன தம்பி, அண்ணாமலை, நாட்டாமை, கோபாலா கோபாலா, சிம்ம ராசி, சுயம்வரம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, விரலுக்கேத்த வீக்கம் போன்ற பல படங்களை கூறிக் கொண்டே போகலாம். மேலும் நம்ம வீட்டு மகாலட்சுமி, நந்தினி போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

விளம்பரம்

துபாயில் மகள் கணவருடன் விடுமுறையை கழிக்கும் குஷ்பூ.! அழகான குடும்பம், சுத்தி போடுங்கப்பா.! 5

நடிப்பது மட்டுமில்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் அவர் முதலில் திமுக கட்சியில் இணைந்தார் பின்னர் அங்கிருந்து விலகி காங்கிரசுக்கு சென்றார். தற்போது அவர் பாரதிய ஜனதா கட்சியில் இயங்கி வருகிறார் தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் அவர் தற்போது தனது கணவர் மற்றும் மகளுடன் விடுமுறை கழிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார். குஷ்பூவிற்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவந்திகா மற்றும் அனந்திதா. இதில் மூத்த மகள் அனந்திதா பார்ப்பதற்கு அப்படியே குஷ்பூ போலவே இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நடிகை Vanitha Vijayakumar - Robert மாஸ்டர் திருமணம்..! இணையத்தில் வைரலாகும் திருமண பத்திரிக்கை..!

துபாயில் மகள் கணவருடன் விடுமுறையை கழிக்கும் குஷ்பூ.! அழகான குடும்பம், சுத்தி போடுங்கப்பா.! 7

அனந்திதா லண்டனில் உள்ள நடிப்பு பள்ளியில் படித்து வருகிறார். விரைவில் தமிழ் திரையுலகில் அவர் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். இந்த செய்தியை குஷ்பு சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தார். தன்னுடைய மகள் விரைவில் நடிகையாக அறிமுகம் ஆக இருக்கிறார் என்றும், உங்களுடைய ஆசிர்வாதங்கள் தேவை என்றும் குஷ்பூ பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் ஷூட்டிங், அரசியில் என பிஸியாக இருக்கும் குஷ்பூ சிறிது ஓய்வு எடுப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment