பிக்பாஸ் கொண்டாட்டம் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில் விக்கிரமனுக்கு துப்புரவு பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து மாலை அணிவித்தும், மகுடம் சூட்டியும் இருக்கின்றனர். அப்போது அரங்கமே எழுந்து நின்று கைதட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அசீம் மற்றும் தனலட்சுமி இருவரும் அமைதியாக கை தட்டாமல் அமர்ந்து விட்டார்கள் ஆனால் பின்னால் ஷிவின் மற்றும் ரட்சிதா இருவரும் சேர்ந்து எழுந்து ஆடிக் கொண்டும் அசீம் மற்றும் தனலட்சுமியை வம்பிழுப்பது போல் வலிப்பு காட்டிக்கொண்டும் இருக்கின்றனர். இந்த ப்ரோமோவை நோட் செய்த நெட்டிசன்கள் தற்போது ஷிவின் மற்றும் ரட்சிதா வலிப்பு காட்டுவதை மட்டும் எடுத்து வைரல் ஆக்கி வருகின்றனர். பிக்பாஸ் முடிந்த கையோடு பிக் பாஸ் கொண்டாட்டம் என்கிற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். தற்போது சீசன் சிக்ஸ் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கும் நிலையில் இந்த சீசனுக்கும் பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்று இருக்கிறது. 21 போட்டியாளர்கள் பங்கேற்ற சீசன் 6ல் 20 போட்டியாளர்கள் மட்டுமே கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு நிவாஷினி மற்றும் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதைப்போல் ப்ரோமோக்களிலும் அவர் காணப்படவில்லை. இந்த நிலையில் பிக்பாஸ் நடந்து கொண்டிருந்தபோது துப்புரவு பணியாளர்கள், மனித கழிவுகளை மனிதரே அள்ளும் அவலம் ஒழிய வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி ரட்சிதா, அமுதவாணன் விக்ரமன் ஆகிய மூன்று பேரும் ஒரு சிறிய நாடகம் ஒன்றை நடத்தி இருந்தனர்.
Went for a break actually, but after seeing the promo I can’t 🤣so here you go ! Intha avamanam tevaiya 🤣? The girls 🔥 #Shivin #Vikraman #Rachitha #BiggBossTamil6 @winsiva19941 @RajkumarSundare @actor_azeem Clown 🤣 pic.twitter.com/YOeWJQ3CaC
— rachitha_destiny (@rachudestiny) February 9, 2023
Podraa vediya 😂😂😂😂#shivin neyyyy❤️❤️ #rachitha ❤️❤️
💥💥💥💥#biggbosstamil6 #biggbosstamil pic.twitter.com/YOOl3xrk7j— Dharshana (@Dharsh_Caffeine) February 9, 2023
இதனால் பிக்பாஸ் கொண்டாட்டத்தின் போது உள்ளே சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்த துப்புரவு பணியாளர்கள் விக்ரமனுக்கு மாலை அணிவித்தும், மகுடம் சூட்டியும் மரியாதை செலுத்தினர். அப்போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். தனா மற்றும் அசீம் இருவரும் பின்னர் அமைதியாக அமர்ந்திருக்க, பின்னால் இருந்து ரட்சிதாவும் ஷிவினும் அசீம் மற்றும் தனாவை வலிப்பு காட்டும் விதமாக சைகைகள் காட்டிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருக்கின்றனர். இது ப்ரோமோவின் இறுதியில் காட்டப்பட்டது.

இதை நோட் செய்த விக்ரமன் மற்றும் ஷிவின், ரட்சிதா ஆதரவாளர்கள் அதை மட்டும் கட் செய்து தற்போது ட்விட்டரில் வேகமாக பரப்பி வருகின்றனர். மேலும் விக்கிரமனுக்கு பெருமை சேர்க்கும் போது வன்மத்தை கொட்டிக் கொண்டிருப்பதாகவும் தனம் மீதும் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.