படம் பார்த்து அழுதுட்டேன்.! கவின் அழ வச்சிட்டாரு.! டாடா படத்தை புகழ்ந்து தள்ளிய பொதுமக்கள்.!

பிக்பாஸ் பிரபலம் கவின் நடிப்பில் இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் தான் டாடா. இந்த படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் மிக நன்றாக இருப்பதாகவும், கண்ணீர் வர வைத்து விட்டதாகவும், ஒரு தனி அப்பாவாக இருந்து குழந்தை எப்படி வளர்ப்பது என்பதில் கவின் நடிப்பில் அசத்தி விட்டார் என்றும் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் நடித்த அதன் மூலமாக பிரபலமானவர் கவின். இதன் பின்னர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு தொடர் இன்று சொன்னால் அது சரவணன் மீனாட்சி தான். இந்த நாடகத்தில் வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகைகளின் மனம் கவர்ந்த ஹீரோவாக மாறினார் கவின். அதன் பின்னர் இவருக்கு 2012 ஆம் ஆண்டு வெளியான பீட்சா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தனது நடிப்பை திறமையை வெளிப்படுத்தினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் பார்த்து அழுதுட்டேன்.! கவின் அழ வச்சிட்டாரு.! டாடா படத்தை புகழ்ந்து தள்ளிய பொதுமக்கள்.! 1பின்னர் இவர் நட்புனா என்னனு தெரியுமா என்கிற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன்பாக இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 3 யில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். சாண்டி, கவின், முகேன், தர்ஷன், லாஸ்லியா சேர்ந்து செய்த சேட்டைகள் பிக்பாஸ் சீசன் 3யை மிகப்பெரிய வெற்றி அடைய வைத்தது. இன்று வரை அந்த வெற்றியை எந்த சீசனாலும் தகர்க்க முடியவில்லை. ஆறு சீசன்கள் முடிந்த நிலையிலும் சீசன் 3-யே டாப்பில் இருக்கிறது. அந்த சீசனில் கவின் ஐந்து லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் லிஃப்ட் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார் .தற்போது டாடா மற்றும் ஊர் குருவி ஆகிய இரண்டு படங்களை நடித்திருக்கிறார். டாடா படத்தை இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அபர்ணாதாஸ் நடித்திருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  அசுரன் கதையை காபி அடிச்சு அவதார்ன்னு எடுத்து வச்சி இருக்கானுங்க ப்ரோ.! கழுவி ஊற்றிய பொதுமக்கள்.!

படம் பார்த்து அழுதுட்டேன்.! கவின் அழ வச்சிட்டாரு.! டாடா படத்தை புகழ்ந்து தள்ளிய பொதுமக்கள்.! 3
இந்த படத்தில் பாக்கியராஜ், டிடிவி கணேஷ் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். ஜென்மார்ட்டின் என்பவர் இசையமைத்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் மனைவி இல்லாமல் குழந்தை வளர்க்கும் தந்தையாக கவின் நடித்திருப்பது போல தெரிகிறது. தற்போது படம் பார்த்து விட்டு வெளியே வந்த பலரும் அதே கருத்தை கூறி இருக்கின்றனர். கவினின் நடிப்பு மிக அருமையாக இருந்ததாகவும், கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டார் என்றும் கவினை மக்கள் புகழ்ந்து தள்ளி இருக்கின்றனர். அவர்கள் கூறிய அந்த விமர்சனங்களை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: News Reels 24×7

விளம்பரம்

Leave a Comment