சீரியல்களுக்கு பெயர் எடுத்த தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி. பலவிதமான தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பல வெற்றி தொடர்களை கொடுத்து அனைத்தையும் ஹிட் ஆக்கி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சி தொடர்களை காண்பதற்கே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்தளவிற்கு தரமான இயக்குனர்களை கொண்டு சீரியல்களை இயக்கி வெளியிட்டு வருகிறது.

அப்படி ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் தான் செல்லம்மா. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. விறுவிறுப்பாக ஓடிவந்த இந்த தொடர் தற்போது முடிவை சந்தித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நாளுக்கு நாள் தொடர் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது இறுதி படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனால் தற்போது சீரியல் முடிவடைய போவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொடர் சீக்கிரம் முடிவடைவதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
