மாமா நான் 2வது தடவ கர்ப்பமா இருக்கேன்.! குட் நியூஸ் சொன்ன தனம்.. மூர்த்தி மாமா மாஸ் பண்றீங்க போங்க.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் உள்ள மருமகள்கள் அடுத்தடுத்து கர்ப்பமாகி வருவது கேலிக்கு உள்ளாகியும் இருக்கிறது. கதை இல்லை என்றால் இந்த கதையை முடித்து விடுங்கள், ஏன் இது போல் இழுத்தடிக்கிறீர்கள்? என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப பங்கான தொடர்களில் ஒன்றாக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகள் நால்வரின் கதை குறித்து இந்த நாடகம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகளான தனத்திற்கு பல வருடங்களாக குழந்தை இல்லை. அவருக்கு திருமணம் ஆனபோது அவரது கொழுந்தன்மார்கள் சிறு குழந்தைகளாக இருந்ததால், அவர்களை பிள்ளைகளாக எண்ணி வளர்த்து வருகிறார் தனம். பின்னர் அவர்களும் வளர்ந்து அவர்களுக்கும் திருமணம் ஆகிறது. ஒரு கட்டத்தில் தனம் தனக்கு குழந்தை இல்லை என்று ஏங்கித் தவிக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாமா நான் 2வது தடவ கர்ப்பமா இருக்கேன்.! குட் நியூஸ் சொன்ன தனம்.. மூர்த்தி மாமா மாஸ் பண்றீங்க போங்க.! 1
நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனத்திற்கும் குழந்தை பிறக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது தம்பியாக இருக்கும் கதிருக்கும் நான்காவது தம்பியாக இருக்கும் கண்ணனுக்கும் தற்போது குழந்தை பிறக்க இருக்கிறது. இந்த இரண்டு தம்பிகளின் மனைவிகளும் கர்ப்பமாக இருக்கிறார்கள். ஆனால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தை பலரும் கேலி செய்வதற்கு காரணம், இந்தத் தொடரில் அவர்கள் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வந்த வீட்டை விட்டுவிட்டு தற்போது ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தனித்தனியே அறைகள் கூட இல்லை. ஒரே இடத்தில் தூங்கி எழுந்து அங்கேயே புழங்கி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் லாஜிக் படி பார்த்தால் எப்படி குழந்தை பிறக்க முடியும் என்று பலரும் கிண்டலாகவும் கேலியாகவும் பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே முல்லை மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் கர்ப்பமாக இருப்பதையே நிறைய பேர் கதை சரியாக போகவில்லை கிரிஞ்சாக இருக்கிறது என்று கமெண்ட்ஸ் போட்டு வந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  திருமணம் முடிந்த கையோடு கணவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ரித்திகா.!

மாமா நான் 2வது தடவ கர்ப்பமா இருக்கேன்.! குட் நியூஸ் சொன்ன தனம்.. மூர்த்தி மாமா மாஸ் பண்றீங்க போங்க.! 3 மாமா நான் 2வது தடவ கர்ப்பமா இருக்கேன்.! குட் நியூஸ் சொன்ன தனம்.. மூர்த்தி மாமா மாஸ் பண்றீங்க போங்க.! 5 மாமா நான் 2வது தடவ கர்ப்பமா இருக்கேன்.! குட் நியூஸ் சொன்ன தனம்.. மூர்த்தி மாமா மாஸ் பண்றீங்க போங்க.! 7

இந்த நிலையில் தற்போது தனமும் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறிவிட்டார். ஆனால் தனத்திற்கு இதில் சந்தோஷம் இல்லை. இந்த விஷயத்தை மூர்த்தியிடம் கூறும் தனம், ஏற்கனவே இரண்டு பேர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் நானும் போய் கர்ப்பம் என்று சொன்னால் நன்றாக இருக்காது என்று கூறுகிறார். இந்த ப்ரோமோவை பலரும் கலாய்த்து வருகின்றனர். கதை இல்லை என்றால் நாடகத்தை முடித்து விடுங்கள் இதுபோல வீட்டில் இருக்கும் அனைவரும் கர்ப்பம் என்று மோசமான கதையை வைத்துக்கொண்டு அறுக்காதீர்கள் என்ற ரீதியில் அனைவரும் கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும் இது பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லை பால்வாடி ஸ்டோர்ஸ் என்றெல்லாம் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment