கோபி தாத்தாவை பாருங்க.! அமிர்தா மகளை தூக்கி வந்து கோபியை பங்கம் செய்து விட்ட இனியா.!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இனியா அமிர்தாவின் மகளை தூக்கிக் கொண்டு கோபியின் வீட்டிற்கு வருகிறார். மேலும் அங்கு அமர்ந்திருக்கும் கோபியை பார்த்து தாத்தா என்று கூப்பிடச் சொல்லி நிலா பாப்பாவிடம் கூறுகிறார். இதை கேட்ட கோபி நான் ஒன்றும் தாத்தா கிடையாது என்று கூற ராதிகா காமெடியாக சிரிக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அமிர்தா கைக் குழந்தையுடன் இருக்கும் ஒரு கைம்பெண் ஆவார். திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஒரு விபத்தில் கணவரை இழந்த அவர், தனது கைக்குழந்தையுடன் மாமனார் மாமியாருடன் வசித்து வருகிறார். அப்போது ஒரு குறும்படத்திற்காக எதிர்பாராத விதமாக எழிலை சந்திக்கும் அவருக்கு, எழிலுடன் காதல் ஏற்படுகிறது. இத்தனை நாள் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார் எழில். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோபி தாத்தாவை பாருங்க.! அமிர்தா மகளை தூக்கி வந்து கோபியை பங்கம் செய்து விட்ட இனியா.! 1
ஆனால் ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த விஷயம் தெரிய வர எழிலுக்கு அவசர அவசரமாக வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கட்டாய கல்யாணத்தால் தனது வாழ்க்கை சீரழிந்தது போல தன்னுடைய மகன் வாழ்க்கையையும் சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக பாக்யா இந்த அவசர திருமணத்தை உடனடியாக நிறுத்தினார். பின்னர் எழில் இத்தனை ஆண்டுகளாக காதலித்து வந்த அமிர்தாவையே அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். திருமணம் செய்த பின்பு தனது குழந்தையுடன் பாக்யா வீட்டில் வசித்து வருகிறார் அமிர்தா. இந்த திருமணத்தை கோபி, செழியன் மற்றும் ஈஸ்வரி பாட்டி ஆகிய மூவரும் ஏற்கவில்லை. அவர்களுக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. இருந்தபோதிலும் வேறு வழியில்லாமல் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் டியூசன் முடிந்து வீட்டிற்கு இனியா நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது எழில் நிலா பாப்பாவை தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  இனியாவையும் செழியனையும் நம்ம பக்கம் வரவழைச்சாச்சு..! அடுத்ததாக எழிலுக்கு கோபி போட்ட ஸ்கெட்ச்.. பாக்கியலட்சுமி ப்ரோமோ..!

கோபி தாத்தாவை பாருங்க.! அமிர்தா மகளை தூக்கி வந்து கோபியை பங்கம் செய்து விட்ட இனியா.! 3
அப்போது நிலாவை இனியா தூக்கிக் கொண்டு நேராக கோபி இருக்கும் வீட்டிற்கு செல்கிறார். மேலும் தான் அத்தை என்றும், கோபி தாத்தா என்றும் அவர் கூறுகிறார். மேலும் குழந்தைகளிடம் கோபியை பார்த்து தாத்தா என கூப்பிடச் சொல்கிறார். அப்போது நான் ஒன்றும் தாத்தா கிடையாது என்று கோபி மழுப்புகிறார். அப்போது ராமமூர்த்தி தாத்தா குறுக்கிட்டு எழில் இந்த குழந்தைக்கு அப்பா என்றால் நீ தானடா தாத்தா என்று கூறுகிறார். இதை பார்த்த ராதிகா விழுந்து விழுந்து சிரிக்கிறார். அந்த காமெடியான ப்ரோமோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment