லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீருக்கு சென்றுள்ள அபிராமி வெங்கடாசலம் தற்போது அங்கு தெரு வீதிகளில் இறங்கி மரண குத்தாட்டம் போட்டு இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 3யில் முக்கியமான போட்டியாளராக கலந்து கொண்டவர் அபிராமி வெங்கடாசலம். இவர் ஆரம்பத்தில் ஒரு மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி மிஸ் தமிழ்நாடு என்கிற பட்டத்தை வென்றார். அதன் பின்னர் இவர் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2017 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ஸ்டார் வார்ஸ் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2018 ஆம் ஆண்டு நாசர் மற்றும் சத்யராஜ் நடித்த நோட்டா என்கிற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். பின்னர் இவர் காற்று வெளியிடை, விக்ரம் வேதா போன்ற பல படங்களுக்கு ஆடிஷனில் கலந்து கொண்டார். ஆனால் அந்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அபிராமி தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் நீதிமன்ற அறையில் கத்திக்கூச்சலிடும் காட்சியில் மிகச்சிறப்பான நடிப்பை அபிராமி வெளிப்படுத்தியிருந்தார். பிறகு அவர் 2019 ஆம் ஆண்டு இரு துருவம் என்கிற வெப் சீரிஸில் நடித்தார். மேலும் பல படங்களில் நடிக்கவும் அபிராமி ஒப்பந்தம் ஆக்கியிருக்கிறார் இதற்கிடையே அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் ழபாஸ் சீசன் 3 இன் முக்கிய போட்டியாளராக அவர் கலந்து கொண்டார். 57 நாட்கள் சிறப்பாக விளையாடி வந்த அவர் திடீரென நிகழ்ச்சிகளில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பிக்பாஸில் இருந்தபோது முகேனும் அபிராமியும் காதலித்து வருவதாக வதந்திகள் கிளம்பி இருந்த நிலையில் இருவரும் நண்பர்களாகவே பிரிந்து விட்டனர். வெளியில் வந்த பிறகு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் அபிராமி.

பின்னர் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் என்கிற ஓடிடி ழயில் வெளியான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியிலும் அவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பிறகு சில படங்களில் நடிக்க கமிட்டாக இருக்கிறார் அபிராமி. குறிப்பாக தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் காஷ்மீருக்கு சென்றிருக்கிறார். மேலும் காஷ்மீரில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். இந்த நிலையில் இன்று அவர் மகா சிவராத்திரியை முன்னிட்டு சாமி ஊர்வலத்தின் போது காஷ்மீரின் தெருக்களில் இறங்கி நடனமாடி இருக்கும் வீடியோவை அவரே பகிர்ந்து இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video. !
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O