அனுமதி இன்றி கிளிகள் வளர்த்த ரோபோ ஷங்கருக்கு லட்சக்கணக்கில் அபராதம்.! எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரோபோ சங்கருக்கு தற்போது வனத்துறை 2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் ரோபோ சங்கர். இவர் தற்போது பல படங்களில் காமெடி ரோலில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் பின்னணி பேசியும் வருகிறார். இவர் நடித்து கடந்த ஆண்டு யுத்த சட்டம், இரவின் நிழல், தி லெஜெண்ட், கோப்ரா ஆகிய படங்கள் வெளியாகி இருந்தது. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். பிகில் மற்றும் விருமன் ஆகிய இரு படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ஒன்றிலும் பங்கு பெற்றிருந்தார்.இந்த நிலையில் சமீபத்தில் ரோபோ சங்கரின் ஹோம் டூர் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. இந்த வீடியோவை விஜய் டிவியின் பிரபலங்களாக இருந்த புகழ் மற்றும் பாலா ஆகிய இருவரும் தொகுத்து வழங்கி இருந்தனர். இந்த வீடியோ வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களையும் பெற்றிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி இன்றி கிளிகள் வளர்த்த ரோபோ ஷங்கருக்கு லட்சக்கணக்கில் அபராதம்.! எவ்வளவு தெரியுமா? 1

விளம்பரம்

இந்த வீடியோ வைரலானது தொடங்கியது முதல் ரோபோ சங்கர் மீது ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த வீடியோவில் அவர் தனது வீட்டில் பச்சை கிளிகள் வளர்ப்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதை அடுத்து அவரது வீட்டிற்கு விரைந்த வனத்துறையினர் வீட்டில் இருந்த பச்சைக்கிளிகளை பறிமுதல் செய்திருந்தனர். பறவைகளை வீட்டில் கூண்டில் அடைத்து வைத்து வளர்க்கும் பொழுது அதனால் சுதந்திரமாக வெளியில் பறந்து செல்ல முடிவதில்லை. இதனால் இனப்பெருக்கம் தடைப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பச்சை கிளிகள் இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதால் பச்சை கிளிகளை வீட்டில் வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் பச்சை கிளிகளை விற்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் வீட்டில் யாராவது கிளிகள் வளர்த்தால் அது பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் ரோபோ சங்கரின் ஹோம் டூர் வீடியோவில் பச்சை கிளிகள் இருப்பது தெரிய வந்தது.

தொடர்புடையவை  "ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு...கண்ணீர் விட்டு அழுத பவி டீச்சர்"!!

அனுமதி இன்றி கிளிகள் வளர்த்த ரோபோ ஷங்கருக்கு லட்சக்கணக்கில் அபராதம்.! எவ்வளவு தெரியுமா? 3
இதுகுறித்து விசாரணைக்கு வருமாறு ரோபோ சங்கருக்கு வனத்துறை அழைப்பு விடுத்த நிலையில், இலங்கையில் இருப்பதால் தற்போது வர முடியவில்லை, நேரில் வந்தவுடன் இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்க இருப்பதாகவும், அந்த கிளிகளை தாங்கள் விலை கொடுத்து வாங்கவில்லை, தங்களுக்கு பரிசாக வந்த கிளிகள் என்பதால் அதை வீட்டில் வளர்த்து வந்ததாகவும் ரோபோ சங்கர் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் ரோபோ சங்கர் உரிய அனுமதி பெறாமல் வீட்டில் வெளிநாட்டு ரக அலெக்சாண்ட்ரியன் வகை கிளிகளை வளர்த்ததால் இரண்டரை லட்சம் அபராதம் விதித்துள்ளது வனத்துறை. மேலும் அந்த கிளிகளை மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் வனத்துறையினர் ஒப்படைத்தும் இருக்கின்றனர்..! அந்த செய்தியை நீங்களும் காண..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Polimer News.

விளம்பரம்

Leave a Comment