சமூக காலமாக டிவிகளில் வைரலாகி வரும் ஒரு நபர் தான் மன்சூர் அலிகான். தற்போது தனது பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடாமல் பலாப்பழம் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ஆரம்பத்தில் மிகப்பெரிய வில்லனாக 90ஸ் கிட்ஸ்களுக்கு அறிமுகம் ஆனவர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். விஜயகாந்தும் இவரும் நெருங்கிய நண்பர்கள். விஜயகாந்தின் பல படங்களில் இவர் வில்லனாக நடித்து இருப்பார். விஜயகாந்த் உடல்நலம் குன்றிய சமயத்தில் ஒரு திருமண விழாவிற்கு வந்திருந்தார். அப்போது அவரை பார்த்தபடியே அருகிலேயே அமர்ந்து கண்கலங்கியபடி இருந்தார் மன்சூர் அலிகான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெளியில் கெத்தாக இருந்தாலும் குழந்தை மனசாக இருப்பார். காமெடியாக பல விசயங்கள் செய்து கொண்டிருப்பார். இதை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜே ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டார். அவரின் யதார்த்தமான ஆட்டிட்யூட் எனக்கு பிடிக்கும் என்று கூறியிருப்பார். அவர் பேசும் போது, மன்சூர் அலிகானின் நேர்காணல் பார்த்துக் கொண்டிருந்தபோது நிரூபர் சீரியஸாக கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார் ஆனால் மன்சூர் ஒரு இலையை வாயில் வைத்து ஊதிக் கொண்டிருப்பார். அவருக்கு கைதி படத்தில் ஒரு வாய்ப்பு கொடுக்க எண்ணியிருந்தேன். அவரை வேறு படத்தில் கொண்டு வருவேன் என்றும் கூறியிருந்தார். சமீபத்தில் கூட அவரது மகனை ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகம் செய்து வைத்துவிட்டு மகனையே கலாய்த்து தள்ளினார். இதெல்லாம் ரசிகர்களுக்கு பெரும் பொழுதுபோக்காக அமைந்துள்ளது.

சமீபத்தில் விக்ரம் படத்தில் வந்த சக்கு சக்கு பாடலுக்கு யூடியூப் ஆங்கர்களுடன் சேர்ந்து ஆடினார். அந்த வீடியோவும் வைரலானது. இவ்வாறு சமீப காலமாக வைரல் மன்னனாக வலம் வருகிறார் மன்சூர் அலிகான். இன்றைக்கு மன்சூர் அலிகானுக்கு 61வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம் போல கேக் வெட்டி கொண்டாடாமல் பலாப்பழம் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் ஆங்கிலேய மேலை நாடுகள் மரபுகளை பின்பற்றும் சமூகத்தில் அதை தவிர்த்து விட்டு பழம் வெட்டி கொண்டாடி இருக்கும் மன்சூர் அலிகானுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. இயற்கையான வாழ்க்கைக்குத் திரும்புங்கள்.! கலப்படம் செய்யப்பட்ட கேக் மற்றும் பேக்குகளை தவிர்க்கவும் இயற்கையான பழங்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள்..பலாப்பழத்துடன் எனது பிறந்தநாள் விழா என்று பதிவிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O