மீண்டும் பாக்கியாவுக்கு கிடைத்த IT கம்பெனி கேன்டீன் ஆர்டர்.! கெடுத்து விடும் ராதிகா.!

பாக்கியலட்சுமி தொடரில் கைவிட்டு போன கேன்டீன் கான்ட்ராக்ட் தற்போது மீண்டும் பாக்கியாவுக்கும் கிடைத்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர், தற்போது அடுத்த விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக இருக்கிறது பாக்கியலட்சுமி தொடர். இந்த தொடரில் ஹீரோயின் பாக்யாவிற்கு அடுத்தடுத்து ஏதாவது பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. முதலில் தனது மூத்த மகன் செழியன் கிறிஸ்தவ பெண்ணான ஜெனியை திருமணம் செய்து கொள்வது தொடங்கி, பின்னர் தனது கணவர் கோபியை தன்னை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகா என்பவரை திருமணம் செய்து கொண்டிருப்பது வரை பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் பாக்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பாக்கியாவுக்கு கிடைத்த IT கம்பெனி கேன்டீன் ஆர்டர்.! கெடுத்து விடும் ராதிகா.! 1

விளம்பரம்

தற்போது கதைப்படி இளைய மகனான எழிலுக்கு பல தடைகளை மீறி அமிர்தாவையும் திருமணம் செய்து வைத்திருக்கிறார் பாக்யா.இருந்தபோதிலும் பாக்கியாவின் பிரச்சினைகள் இன்னும் முடிந்த பாடில்லை. பாக்யா தற்போது வசித்து வரும் வீட்டை 70 லட்சம் கொடுத்து வாங்கிக் கொள்ளுமாறு கோபி வற்புறுத்தி வருகிறார். இதனால் வீட்டில் பிரச்சனைகள் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது பாக்யாவிற்கு மீண்டும் சமையல் காண்ட்ராக்ட் கிடைத்துள்ளது. திருமண ஆர்டர்கள் எடுக்கும் அவர் தொடர்ந்து ஆர்டர்கள் செய்து ஆறு மாதத்தில் கோபியின் கடனை அடைக்க இருப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தொடரில் சற்று திருப்பமுனையாக தற்போது மீண்டும் பாக்கியாவுக்கு ஐடி கம்பெனியில் கேன்டீன் கான்ட்ராக்ட் கிடைத்துள்ளது.

தொடர்புடையவை  பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின்பு முதல் வீடியோவை வெளியிட்ட ஷெரினா.!

மீண்டும் பாக்கியாவுக்கு கிடைத்த IT கம்பெனி கேன்டீன் ஆர்டர்.! கெடுத்து விடும் ராதிகா.! 3

விளம்பரம்

ஏற்கனவே பாக்யா வேலை பார்த்து வரும் திருமண மண்டபத்தின் ஓனர் ஒரு ஐடி கம்பெனியில் பாக்கியாவுக்கு வேலை வாங்கி கொடுத்தார். ஆனால் அங்கு வேலை பார்த்து வந்த ராதிகா அந்த கான்ட்ராக்ட் பாக்கியாவுக்கு கிடைக்காமல் செய்து விட்டார். இதனால் அந்த கம்பெனி வேறு ஹோட்டலுக்கு கான்ட்ராக்ட் கொடுத்து விட்டது. ஆனால் அங்கு உணவு சாப்பிட்ட பலருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் மீண்டும் பாக்கியாவை அழைத்து அந்த கான்ட்ராக்ட்டை ஓனர் திருப்பி கொடுக்கிறார். ஆனால் ராதிகா பாக்கியாவிடம் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கிறார். பாக்கியாவால் பதில் சொல்ல முடியவில்லை. ஆங்கிலமே தெரியாமல் நீங்கள் எப்படி ஐடி கம்பெனியில் கான்ட்ராக்ட் எடுக்க முடியும் என்று ராதிகா கேட்க பதிலடி கொடுக்கிறார் பாக்கியா. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment