பல நாள் கனவு நினைவாகியது.! சென்னையில் புது வீடு வாங்கிய செம்பருத்தி சீரியல் நடிகை லட்சுமி.!

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் வில்லியாக நடித்த ஊர் வம்பு லட்சுமி தற்போது சென்னையில் ஒரு அப்பார்ட்மெண்ட் ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார். அந்த வீடியோவை தற்போது ஒரு விலாக் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலை யாரும் மறந்து இருக்க முடியாது. சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் வில்லியாக நடித்து அசத்தி இருந்தவர் நடிகை லட்சுமி. டி.ஆர்.பியில் முதலிடம் வகித்து வந்த இந்த சீரியலில் ஆரம்பம் முதல் இறுதி வரை வில்லியாக இருந்தவர் லட்சுமி. ஹீரோயினுக்கு எந்த அளவிற்கு ரசிகர் கூட்டம் இருந்ததோ அதே அளவிற்கு வில்லிக்கும் மக்களின் ஆதரவு இருந்தது என்று சொன்னால் அது லக்ஷ்மிக்கு தான். சிறந்த வில்லிக்கான பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பல நாள் கனவு நினைவாகியது.! சென்னையில் புது வீடு வாங்கிய செம்பருத்தி சீரியல் நடிகை லட்சுமி.! 1

விளம்பரம்

இவர் முதல் முறையாக ராஜ் டிவியில் ஒளிபரப்பான “ஊர் வம்பு” என்ற நிகழ்ச்சியில் முதல் முறையாக தோன்றினார். அதுவே இவரின் அடையாளம் ஆகி போனது. செம்பருத்தி சீரியலுக்கு பின்னர் வனஜா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்த பின்பு லட்சுமி என்ற அடையாளம் மறைந்து தற்போது வனஜா என்று சொன்னால் தான் இவரை தெரியும் அளவிற்க்கு மாறி போனார். பின்னர் சன் டிவியில் தமிழ் தொலைக்காட்சி தொடரான அகல்யா என்ற தொடரில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் அதே டிவியில் வம்சம் என்ற தமிழ் சீரியலில் தோன்றினார். பின்னர், அவர் தமிழ் சீரியலான செம்பருத்தியில் ஜீ டிவியில் வனஜா என்ற நெகட்டிவ் ரோலில் நடித்தார், இது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது அதே சேனலில் பேரன்பு என்ற சீரியலில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தொடர்புடையவை  இன்றைய "பூகம்பகம்" டாஸ்க்கிலும் தோல்வியை தழுவிய ஹவுஸ்மேட்ஸ்.! பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு.!

பல நாள் கனவு நினைவாகியது.! சென்னையில் புது வீடு வாங்கிய செம்பருத்தி சீரியல் நடிகை லட்சுமி.! 3

விளம்பரம்

அவரது மகனுடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். லக்ஷயா ஜங்ஷன் என்று பெயர் கொண்ட அந்த சேனலில் பல வீடியோக்களை அவர் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். அதில் தற்போது அவர் திருமழிசை பகுதியில் ஒரு அபார்ட்மெண்டில் புது வீடு ஒன்றை வாங்க வந்துள்ளார். அதை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பல வசதிகளுடன் கூடிய அந்த வீட்டை சுற்றி காண்பித்தும் இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Lakshaya Junction

விளம்பரம்

Leave a Comment