நடிகரும் இயக்குனருமான செல்வராகவன் தற்போது விரத்தியுடன் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அந்த ட்வீட் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறது. இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகன் தான் செல்வராகவன். இவர் சிறு வயதிலேயே திரைத்துறையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக இயக்குனராக அறிமுகமாகினார். 2002 ஆம் ஆண்டு தனது தம்பி தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை என்ற படத்தை இயக்கியதன் மூலமாக, அண்ணன் இயக்குனராகவும், தம்பி நடிகராகவும் அவதாரம் எடுத்தனர். அந்தப் படத்திற்குப் பின்னர் தனுஷ் சோனியா அகர்வாலை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். அந்தப் படத்திற்கு பின்னர் சோனியா அகர்வாலும் செல்வராகவும் திருமணம் செய்து கொண்டனர். வித்தியாசமான கதை களத்தில் உருவாக்கப்பட்டிருந்த அந்த படத்திற்கு பின்னால் செல்வராகவன் மிகவும் அறியப்பட்ட இயக்குனராக அவதாரம் எடுத்தார். தனுஷின் நடிப்பும் இந்த படத்திற்கு பின்னர் வெகுவாக பாராட்டப்பட்டது. தனுஷும் நல்ல நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

தன்னை செதுக்கியவர் தனது அண்ணன் செல்வராகவன் தான் என்று தனுஷ் பல இடங்களில் செல்வராகவன் குறித்து பெருமையாக பேசி இருக்கிறார். தற்போது செல்வராகவன் சில காலமாக படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் கடைசியாக மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் என்கிற படத்தில் நடித்தார். அதற்கு முன்பாக பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்திருந்தார். இவர் கடைசியாக தனது தம்பியை வைத்து இயக்கிய நானே வருவேன் படமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. நடிப்பை காட்டிலும் செல்வராகவன் இயக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பல ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. தற்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இதனால் தொடர்ந்து படங்களை இயக்குவது நடிப்பது என்று இரண்டிலும் கவனம் செலுத்த இருப்பதாகவே தெரிகிறது. திரை துறையில் மிக ஆக்டிவாக இருக்கும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

ட்விட்டரில் தன்னுடைய படங்கள் குறித்தும் வரவிருக்கும் அடுத்த ப்ராஜெக்ட்டுகள் குறித்தும் தொடர்ந்து அறிவித்து வருகிறார் செல்வராகவன். இந்த நிலையில் இன்று அவர் செய்திருக்கும் ட்வீட்டில் விரத்தியுடன் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அந்த ட்வீட்டில் அனுபவத்தில் சொல்கிறேன், நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையைத் தவிர எதையும் யோசித்ததில்லை, இன்று நண்பர்களாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. எங்கு போய் நட்பை தேடுவேன் என்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். இந்த டிவீட் தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. சமீப காலமாகவே செல்வராகவன் விரத்தியாக பல ட்வீட்டுகளை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் குடும்பம் குறித்து பதிவிட்ட ஒரு ட்வீட்டால் சர்ச்சை எழுந்தது. ஒருவேளை அவரது மனைவியை பிரிகிறாரோ? என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் அடுத்ததாக நட்பு குறித்து அவர் எழுதியிருக்கும் இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகி இருக்கிறது. இதனால் செல்வராகவன் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனையா? என்றும் சிலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் ,😥😥😥 pic.twitter.com/k9MM8vCGSK
— selvaraghavan (@selvaraghavan) March 1, 2023