சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்த பெண் போட்டியாளரின் அம்மா ஒருவர் DJ ப்ளாக்கை திட்டுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்கிற அடையாளத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். பாட்டு போட்டியை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ரியாலிட்டி ஷோவிற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். எட்டு பருவங்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசனில் அடி எடுத்து வைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சூப்பர் சிங்கர் சீனியர் என்று இரண்டு வகையாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. விஜய் டிவியின் டாப் ரியாலிட்டி ஷோக்களின் வரிசையில் சூப்பர் சிங்கர் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் முன்னணி பாடகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பது உண்டு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எஸ். பி. பாலசுப்ரமணியம், பி சுசீலா, எஸ் ஜானகி, எல் ஆர் ஈஸ்வரி போன்ற பழம்பெரும் பாடகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்த்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு பலமுறை நடுவர்களாகவும் வந்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் மாகாபா மற்றும் பிரியங்கா. இதில் மாகாபா ஆனந்த் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா 2015 ஆம் ஆண்டு முதல் தொகுத்து வழங்கி வருகிறார். அதற்கு முன்பாக சிவகார்த்திகேயன், சின்மயி, திவ்யா, பாவனா என்று பலரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர். தற்போது மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் சூப்பர் சிங்கரின் அங்கமாகவே மாறிவிட்டனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சூப்பர் சிங்கரில் முக்கியமான போட்டியாளராக இருந்து வரும் பூஜா என்பவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். அதற்க்கு முக்கிய காரணம் DJ பிளாக். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் முக்கிய பங்கு வகிப்பவர் DJ பிளாக். குறிப்பாக குக் வித் கோமாளியில் பின்னணியில் வடிவேல் மற்றும் பலரின் குரல்களை ஒலிக்க விடுபவர். அந்த வரிசையில் அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்து வருகிறார். குறிப்பாக போட்டியாளர் பூஜா வரும் போது இவர் pickUp லைன்களை போடுவார். அது பார்பதற்க்கே மிக Cute ஆக இருக்கும். யூடியூபில் பலரும் அதை cut செய்து வீடியோவாக வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று பூஜாவின் வீட்டில் இருந்து அவரின் பெற்றோர்கள் வந்துள்ளனர். அவர்கள் DJ ப்ளாக்கிடம் கடுமையாக நடந்து கொள்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இது Prank என்று சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களுமா அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Vijay Television