முதல்முறையாக சின்னத்திரைக்கு வந்த ராமராஜனிடம் அவரைப் போலவே செண்பகமே பாடலுக்கு பால் கறப்பது போல KPY பாலா செய்து காட்டியிருக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் ராமர் அந்த பாடலை பாடும் போது ராமராஜன் அவரை கலாய்த்தும் இருக்கிறார்.விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் என்கிற நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி வருகிறது. இது தற்போது சீசன் 4 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி பல நகைச்சுவை கலைஞர்களை உருவாக்கியிருக்கிறது. அமுதவாணன், வடிவேல் பாலாஜி, சிங்கப்பூர் தீபன், புகழ், பாலா, ராமர், நாஞ்சில் விஜயன், தங்கதுரை போன்ற பல கலைஞர்கள் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து தான் உருவானவர்கள். அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு முதன்முறையாக நடிகர் ராமராஜன் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எண்பது மற்றும் 90களில் முன்னணி நடிகராக விளங்கிக் கொண்டிருந்தவர் ராமராஜன். இவர் முதல் முறையாக 1977 ஆம் ஆண்டு மீனாட்சி குங்குமம் என்கிற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் நம்ம ஊரு நல்ல ஊரு என்கிற படத்தில் 1986 ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களையும் இயக்கி இருக்கிறார் ராமராஜன். இவர் தற்போது சாமானியன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராமராஜனுடன் இணைந்து எம்எஸ் பாஸ்கர், ராதாரவி, மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வித்தியாசமான முறையில் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து விரைவில் படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக ராமராஜன் தற்போது சின்னத்திரைக்குள் வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ராமர் செண்பகமே பாடலை பாடினார். அதை பார்த்த kpy பாலா ராமராஜனுக்கு அருகில் சென்று அவரை போலவே பால் கறந்து நடித்துக் காட்டினார். மேலும் ராமர் பாடியதை பார்த்த ராமராஜன், இவர் பாடுறதை பார்த்தால் பாகவதர் வந்து பாடியது போல இருக்கிறது என்று மரணமாக கலாய்த்து தள்ளினார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television