பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் இலங்கை சேர்ந்த ஜனனி. இவர் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தவர் ஜனனி குணசீலன். இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் இலங்கையில் இருக்கும் பிரபல உணவகங்களுக்கு சென்று அங்கு சமைக்கப்படும் உணவுகளை ருசி பார்த்து அதை வீடியோவாக வெளியிட்டு வந்தார். இதனால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. மேலும் ஜனனி பேசும் அழகு தமிழுக்காகவே இவருக்கு தனி ரசிகர் கூட்டமே இருந்து வந்தது. பின்னர் டிக் டாக் செயலி வந்த பின்னர் பல டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்திருந்தார் ஜனனி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிக் டாக் செயலி முடங்கிய பின்னர் instagram-க்கு தாவிய ஜனனி அங்கும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் உருவாகினர். தொடர்ந்து ஜனனிக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகத் தொடங்கியது. இதனால் ஜனனி குறுகிய காலத்திலேயே பிரபலமாகினார். பின்னர் அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் ஜனனி. இந்த சீசனில் வெற்றியாளராக வருவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 80 நாட்களுக்குப் பின்னர் ஜனனி வெளியேற்றப்பட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இலங்கை போட்டியாளர்களை அவமானப்படுத்தி விட்டதாக இலங்கையஐ சேர்ந்த தமிழ் ரசிகர்கள் குற்றம் சாட்டினர். மேலும் ஜனனியை நீக்கிய விஜய் டிவியை இனி பார்க்கப் போவதில்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். வெளியே வந்த பின்னர் ஜனனிக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதில் தளபதியுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 67வது படமான தளபதி 67 படத்தில் ஜனனிக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இது குறித்து ஜனனி எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் சிகப்பு நிற உடையில் செம க்யூட்டாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O