தாஜ்மஹாலில் வைத்து காதல் மனைவி ஆர்த்திக்கு செம்ம சர்ப்ரைஸ் செய்துள்ள ஜெயம் ரவி.! இதோ Video.!

ஜெயம் ரவி தனது மனைவிக்கு தாஜ்மஹாலில் வைத்து மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை செய்திருக்கிறார். அங்கு “கேண்டில் லைட் டின்னர்” என்று அழைக்கப்படும் இரவு விருந்திற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. தமிழ்த் திரையுலகில் 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்கிற படத்தில் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் ரவி. இந்த படத்திற்கு பின்னர் இவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார். திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை கடந்துவிட்ட போதிலும் சுமார் 25 படங்களுக்கு உள்ளாகவே நடித்து இருக்கிறார் ஜெயம் ரவி. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது திரைப்படம் கிடைக்கிறது என்று அனைத்து படங்களிலும் நடிக்காமல், தனக்கு ஏற்ற கதையாகவும் நல்ல கருத்துள்ள படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் ஜெயம் ரவி. ஜெயம் ரவிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலில் வைத்து காதல் மனைவி ஆர்த்திக்கு செம்ம சர்ப்ரைஸ் செய்துள்ள ஜெயம் ரவி.! இதோ Video.! 1
இந்தப் படத்தில் கதாநாயகனாக அருள்மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயம்ரவி. இந்த படத்திற்கு பின்னர் ஜெயம் ரவியின் செல்வாக்கு பன்மடங்காக உயர்ந்து இருக்கிறது. தற்போது ஜெயம் ரவி அகிலன், சைரன் என்னும் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் அகிலன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பிரியா பவானிசங்கர், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் மார்ச் 10 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூட்டிங்கில் படு பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி அவ்வப்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்தும் வருகிறார். அவரது மனைவி ஆர்த்தியும் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருப்பார். அவரும் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மகனை பார்த்ததும் ஓடி சென்று கட்டி பிடித்து அழுத மணி.! அப்பாவின் பாசம் விலைமதிப்பில்லாத ஒன்று.!

தாஜ்மஹாலில் வைத்து காதல் மனைவி ஆர்த்திக்கு செம்ம சர்ப்ரைஸ் செய்துள்ள ஜெயம் ரவி.! இதோ Video.! 3
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் என அனைத்து விசேஷ நாட்களிலும் குடும்பத்துடன் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருவது வழக்கமாக இருக்கிறது. சமீபத்தில் கூட ஜெயம் ரவி வீட்டில் நடந்த பூஜை ஒன்றின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. அந்த பூஜையில் குஷ்பூ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இருந்து ஜெயம் ரவி தற்போது தனது மனைவியுடன் டெல்லிக்கு சென்று இருக்கிறார். அங்கு தாஜ்மஹால் முன்பு அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாக இருந்தது.

தாஜ்மஹாலில் வைத்து காதல் மனைவி ஆர்த்திக்கு செம்ம சர்ப்ரைஸ் செய்துள்ள ஜெயம் ரவி.! இதோ Video.! 5

விளம்பரம்

இந்த நிலையில் தற்போது டெல்லியில் தனது மனைவிக்கு கேண்டில் லைட் டின்னர் என்று சொல்லப்படும் இரவு நேர விருந்தை ஏற்பாடு செய்து ஆர்த்திக்கு சர்ப்ரைஸ் செய்து அசத்தியிருக்கிறார் ஜெயம் ரவி. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

தொடர்புடையவை  இவ்வளோ வருஷம் எங்கயா போன? இப்ப எங்க இருந்து வந்துச்சு ஞானோதயம்? வெளுத்து வாங்கிய கண்ணம்மா

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment