வாத்தி படத்திலிருந்து வெளியாகி பல இளைஞர்களின் உள்ளத்தை கவர்ந்த வா வாத்தி பாடலில் முழு வீடியோ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. வெளியான சில நிமிடங்களில் இந்த பாடல் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெறலறு இருத்த படம் தான் வாத்தி. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கியிருந்தார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் இந்த படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடிகர் தனுஷுன் இணைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, கென் கருணாஸ் போன்ற பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கல்வியை வியாபாரமாக பார்க்கும் சில மனிதர்களிடமிருந்து எப்படி ஆசிரியர் ஒருவர் பாதுகாக்கிறார் என்பதும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் முன்னேறக்கூடாது என்று நினைக்கும் தனியார் பள்ளிகளை முகத்திரையை தோலுரிக்கும் விதமாகவும் இந்த படத்தின் கதை அமைந்திருந்தாக தனுஷ் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வெளியான முதல் மூன்று நாட்களில் சுமாரான வசூலை பெற்றிருந்தது. இருந்தபோதிலும் 51 கோடி வசூல் வரை பெற்றிருந்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. படத்தை தயாரித்த சித்தாரா என்டர்டெயின்மன்ட் நிறுவனம் அவ்வப்போது வசூல் குறித்த நிலவரங்களை தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்தது. ஆரம்பத்தில் இந்த கதை நன்றாக இல்லை, தெலுங்கு படம் போல் இருக்கிறது, தெலுங்கு சாயல் கலந்திருக்கிறது என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட போதும் ஒரு வாரத்திற்கு பின்னர் குடும்பம் குடும்பமாக இந்த படத்தைச் சென்று பார்த்து வந்தனர் தனுஷ் ரசிகர்கள். இந்த படத்தின் முக்கிய பாடலாக இருப்பது “வா வாத்தி” தான். இந்த பாடலை பாடகி ஸ்வேதா மோகன் பாடியிருப்பார். இந்தப் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது முதலே பலரும் இதற்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்தும் வீடியோக்கள் வெளியிட்டோம் வந்தனர். சமீபத்தில் பாடல் வெளியீட்டு விழாவில் கூட ஸ்வேதாவுடன் இணைந்து தனுஷ் இந்த பாடலை பாடி இருந்தார்.

பின்னர் தனுஷ் குரலில் இந்தப் பாடல் ஆல்பம் போல் படக் குழுவினரால் வெளியிடப்பட்டிருந்தது. பலரின் மனம் கவர்ந்த பாடலாக இருக்கும் இந்த பாடலின் முழு வீடியோ சாங் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த பாடலைக் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Aditya Music Tamil