குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலையை தொடர்ந்து குரேஷியும் வெளியேற இருப்பதாக தகவல் வெளியானது. அவரது ட்விட்டர் கணக்கில் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நன்றி சொல்லி அவர் போட்ட ட்வீட் ஒன்று தற்போது டெலிட் செய்யப்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரை உலகின் ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் வகிப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். க் வித் கோமாளி நிகழ்ச்சி சற்றே வித்தியாசமான ரியாலிட்டி ஷோ ஆகும். இந்த நிகழ்ச்சியில் சுட்டித்தனங்கள் நிறைந்த ஒருவரை கோமாளி என்கிற பெயரில் வைத்துக்கொண்டு சமைக்கும் சமையல் நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது. மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதில் பழைய கோமாளிகளாக இருந்த புகழ், சுனிதா, குரேஷி, மணிமேகலை ஆகிய நான்கு பேர் மட்டுமே தொடர்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாலா கோமாளியாக வரவில்லை. மேலும் சிவாங்கி கோமாளியில் இருந்து குக்காக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.
புதிய கோமாளிகளாக ஜிபி முத்து, சிங்கப்பூர் தீபன், மௌனராகம் சீரியல் ஹீரோயின் ரவீனா, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்ற பலரையும் உள்ளே இறக்கி இருக்கின்றது குக் வித் கோமாளி டீம். மேலும் 10 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மேகா படத்தின் ஹீரோயின் சிருஷ்டி டாங்கே. வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பன், பிக் பாஸ் சீசன் 3 பிரபலம் ஷெரின் ஷிருங்கர். ரஜினியுடன் முத்து படத்தில் நடித்திருந்த விசித்ரா, நாய் சேகர் படை இயக்குனர் கிஷோர், பாக்கியலட்சுமி சீரியல் எழில், மதுரை காளையன், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியன், மைம் என்னும் கலையில் கோல்ட் மெடல்லிஸ்ட் ஆக இருக்கும் கோபிமற்றும் சிவாங்கி ஆகிய 10 பேர் குக்குகளாக களம் இறங்கியிருந்தனர். இதில் நாய் பட சேகர் கிஷோர் மற்றும் காளையன் ஆகிய இரண்டு குக்குகள் வெளியேற்ற பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்து இருந்தார்.

அவர் விலகல் குறித்து சரியான காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் குரேஷி நிகழ்ச்சியில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியானது. அவரது ட்விட்டர் பக்கத்தில் பல நல்ல நினைவுகளை கொடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நன்றி என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் பலரும் குரேஷி நிகழ்ச்சியில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியானது. இந்த செய்தி தீயாக பரவத் தொடங்கிய நிலையில் அந்த ட்வீட் டெலிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது உடல் மண்ணுக்கு உயிர் குக் வித் கோமாளிக்கு என்று மீண்டும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். இதனால் குக் வித் கோமாளி ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர் வெளியேறப்போகிறாரா இல்லை தவறுதலாக பதிவிட்டாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.