கணவருடன் சேர்ந்து ரஞ்சிதமே பாடலுக்கு ரஷ்மிகா போலவே மரண குத்தாட்டம் போட்ட மைனா நந்தினி.!

மைனா நந்தினி தற்போது தனது கணவர் யோகியுடன் சேர்ந்து கொண்டு ரஞ்சிதமே பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மதுரையை சேர்ந்த மைனா நந்தினி நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தார். இவர் முதன்முறையாக சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு இவர் மைனா நந்தினி என்று அறியப்பட்டார். இந்த சீரியலுக்குப் பிறகு குக் வித் கோமாளிக்கு முன்னோடியாக இருக்கும் கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலையும் வென்று இருந்தார். இதன் பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை, நீலி, சின்னதம்பி, அரண்மனைக் கிளி போன்ற பல விஜய் டிவி தொடர்களில் நடித்து அசத்தி இருக்கிறார். பின்னர் கலக்கப் போவது யாரு சீசனில் நடுவராகவும் பங்கேற்று இருக்கிறார். தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கி வரும் மைனா வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கணவருடன் சேர்ந்து ரஞ்சிதமே பாடலுக்கு ரஷ்மிகா போலவே மரண குத்தாட்டம் போட்ட மைனா நந்தினி.! 1

விளம்பரம்

மேலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜீலியட், நம்ம வீட்டுப் பிள்ளை, அரண்மனை 3, விக்ரம், விருமன், சர்தார் போன்ற படங்களில் நடித்துள்ளார். விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து இருந்தார். அடுத்தப்படியாக விருமன் மற்றும் சர்தார் படங்களில் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து நடித்து இருக்கிறார். தற்போது பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த மைனா, கடைசி 5 போட்டியாளர்களில் ஒருவராகவும் வந்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக மைனாவை வெளியேற்றி இருந்தனர். மைனாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அவருக்கு யோகியுடன் திருமணமாகி துருவ் என்கிற மகனும் இருக்கிறார். மைனா விங்க்ஸ் என்கிற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார் மைனா. இதில் கணவர் மற்றும் மகன் செய்யும் சேட்டைகளை வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.

தொடர்புடையவை  மயூவுக்கு நடக்கும் பூப்புனித நீராட்டு விழா.! கண்கலங்கி அழும் கோபி.! இன்றைய ப்ரோமோ.!

கணவருடன் சேர்ந்து ரஞ்சிதமே பாடலுக்கு ரஷ்மிகா போலவே மரண குத்தாட்டம் போட்ட மைனா நந்தினி.! 3
இந்த நிலையில் தனது கணவர் யோகியுடன் இணைந்து அவர் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment