நடுக்கடலில் வைத்து மனைவி ஷாலினியுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் தல அஜித்.! Cute புகைப்படங்கள்.!

தல அஜித் குமார் மற்றும் ஷாலினி நடுக்கடலில் கப்பலில் வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷாலினி தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளாக பல வருடங்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதிகள். இவர்கள் எது செய்தாலும் அது வைரலாகி விடுவது வழக்கமாக இருக்கிறது. குறிப்பாக அவர்களது புகைப்படங்கள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஏங்கி காத்து கிடக்கின்றனர். இத்தனை நாளாக தல அஜித் குமாரின் புகைப்படங்கள் வெளியாவது அரிதாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய மனைவி ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருந்தார். இணைந்து சில நாட்களிலேயே அவர் தொடர்ந்து அஜித் புகைப்படங்களையும் குடும்பத்துடன் அவர் நேரம் செலவழிக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

நடுக்கடலில் வைத்து மனைவி ஷாலினியுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் தல அஜித்.! Cute புகைப்படங்கள்.! 1

விளம்பரம்

சமீபகாலமாக அஜித்குமார் ஷூட்டிங்கில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இதனால் அவர் அடிக்கடி வெளிநாடு சென்று வருகிறார்.சமீபத்தில் லண்டனுக்குச் சென்றிருந்த அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. மேலும் ஷூட்டிங்க்கு செல்லும்போதும், வெளிநாடு செல்லும் போதும் அவருடைய புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. தற்போது அஜித் குமார் ஏகே 62 என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் பொங்கலை ஒட்டி ரிலீஸ் ஆன துணிவு படம் சுமார் 300 கோடி வசூலை கடந்து வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து மூன்று முறை எச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இணைந்து நடித்திருந்தார் அஜித் குமார்.

தொடர்புடையவை  அட நம்ம Banu செம்ம கியூட்டா இருக்காங்களே..! தாமிரபரணி நடிகை Banu-வின் அழகிய குடும்ப புகைப்படங்கள்..!

நடுக்கடலில் வைத்து மனைவி ஷாலினியுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் தல அஜித்.! Cute புகைப்படங்கள்.! 3

விளம்பரம்

தற்போது அடுத்த படத்தின் அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருக்கிறார். இவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இணைந்திருக்கிறார். ஆனால் ஷூட்டிங் விவரங்கள் குறித்து இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. துணிவு படத்திற்காக வெள்ளை முடி நீண்ட தாடியுடன் காணப்பட்ட அஜித்குமார் தற்போது தாடியை ட்ரிம் செய்துவிட்டு அதே ஹேர் ஸ்டைலுடன் செம க்யூட்டாக காணப்படுகிறார். வெளிநாடுகளில் சுற்றுலாவை முடித்துவிட்டு சென்னை திரும்பி இருக்கும் அவர் தற்போது ஷாலினி மற்றும் அஜித் நடுக்கடலில் வைத்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களை ஷாலினியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த கியூட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment