ஒரு மிமிக்கிரி கூட பண்ண தெரியல.! நீயெல்லாம் தேங்கா சீனிவாசன் பேத்தினு வெளிய சொல்லாத.!

கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்த லியோனியை ஸ்ருதிகாவும் பாலாவும் சேர்ந்து கலாய்த்து இருக்கின்றனர். ஆனால் திடீரென கோவப்பட்ட லியோனி அவர்கள் இருவரிடம் கடுமையாக நடந்து கொண்டார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். பல நல்ல கலைஞர்களை உருவாக்கி இருக்கும் விஜய் டிவி, பல லட்சம் ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. ஆரம்பத்தில் நாடகங்கள் குறைவாகவும் ரியாலிட்டி ஷோக்களை மட்டுமே வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த டிவி, தற்போது பல நெடுந் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த தொடர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது. விஜய் டிவியிலிருந்து தற்போது சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் வெள்ளி திரையில் நடிகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பலர் காமெடியிலும் கலக்கி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மிமிக்கிரி கூட பண்ண தெரியல.! நீயெல்லாம் தேங்கா சீனிவாசன் பேத்தினு வெளிய சொல்லாத.! 1

விளம்பரம்

இதில் குறிப்பிட தகுந்த நிகழ்ச்சியாக இருப்பது கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சி மூலம் பல காமெடி கலைஞர்கள் உருவாகி இருக்கிறார்கள். குறிப்பாக புகழ், பாலா, சரத், குரேஷி, ராமர், தங்கதுரை, நாஞ்சில் விஜயன் போன்ற பல கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து உருவாகியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் படங்களிலும் நடித்திருக்கின்றனர். குறிப்பாக புகழ் அஜித் மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது அவர் ஹீரோவாக மிஸ்டர் ஜு என்கிற படத்திலும் நடித்து வருகிறார். பாலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்படிப்பட்ட பல கலைஞர்களை உருவாக்கிய கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் நடுவர்களாக ஸ்ருதிஹா, மதுரை முத்து, தாடி பாலாஜி, பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் இருக்கின்றனர்.

தொடர்புடையவை  மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த ஜிபி முத்து.! அடுத்த 10 நாளுக்கு சிரிப்புக்கு பஞ்சம் இல்ல.!

ஒரு மிமிக்கிரி கூட பண்ண தெரியல.! நீயெல்லாம் தேங்கா சீனிவாசன் பேத்தினு வெளிய சொல்லாத.! 3

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியை அறந்தாங்கி நிஷாவுடன் இணைந்து கே பி ஒய் பாலா தொகுத்து வழங்கி வருகிறார். வார வாரம் யாராவது ஒரு சிறப்பு விருந்தினர்களை அழைத்து நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் திண்டுக்கல் லியோனி மற்றும் பாக்யராஜை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து இருக்கின்றனர். அங்கு வந்த லியோனியிடம் ஸ்ருதிகா நான் தான் லேடி லியோனி என்று கூறுகிறார். அப்போது என்னை போல பேசி காட்டு என்று லியோனி சொல்ல ஸ்ருதிகா பேசி காட்டுகிறார். அப்போது கடுப்பான லியோனி நீயெல்லாம் தேங்காய் ஸ்ரீநிவாசன் பேத்தி என்று சொல்லிக்காதே என்று கடுப்பாகி திட்டுகிறார். இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது பிராங்க் ஆக இருக்க கூடும் என்று பலரும் கமெண்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள் வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment