பள்ளி ஆண்டு விழாவில் செம்ம cute ஆக ஆடிய மைனா மகன்.! விசில் சத்தத்தால் அதிர்ந்த அரங்கம்.!

மைனா நந்தினியின் மகன் துருவின் பள்ளி ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மைனா நந்தினி சென்றிருக்கிறார். மேலும் அங்கு தனது மகன் மேடையில் நடனமாடிய வீடியோவையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவிற்கு லைக்கள் குவிந்து வருகிறது. பள்ளி ஆண்டு விழாவிற்காக தனது மகனுக்கு கோழி போல் வேடம் அணிந்து அழைத்துச் சென்ற அவர், அந்த பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று இருக்கிறார். அந்த விழாவில் மைனாவின் மகன் துருவ் க்யூட்டாக நடனமாடி இருக்கிறார். மதுரையிலிருந்து நடிப்பதற்காக சென்னைக்கு கிளம்பி வந்தவர் மைனா நந்தினி. இவர் முதன்முதலாக சமையல் மந்திரம் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் நந்தினி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி ஆண்டு விழாவில் செம்ம cute ஆக ஆடிய மைனா மகன்.! விசில் சத்தத்தால் அதிர்ந்த அரங்கம்.! 1

விளம்பரம்

இதன் பிறகு நந்தினி என்கிற பெயரே மறந்து மைனா என்று சொன்னால் தான் அவரை தெரியும் அளவிற்கு மிக பிரபலமாக மாறி இருக்கிறார். இந்த நாடகத்திற்கு பிறகு சரவணன் மீனாட்சி பாகம் 3, நீலி, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி போன்ற பல நாடகங்களில் நடித்திருக்கிறார். சில வெப் சீரிஸ்களில் கூட நடித்திருக்கிறார் மைனா. பின்னர் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெண்ணிலா கபடி குழு, காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை, விக்ரம், விருமன் போன்ற பல படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார் மைனா. இவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 6லும் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். கடைசி நான்கு இடங்களில் ஒருவராக வந்த அவர் நான்காவது ஆளாக வெளியேற்றப்பட்டு இருந்தார். மைனாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவரது முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட இரண்டாவதாக யோகி என்ற சின்னத்திரை நடிகரை திருமணம் செய்து கொண்டார்.

தொடர்புடையவை  பாலாஜி முருகதாசின் பிறந்தநாள்.! நைட் பார்ட்டிக்கு அம்மாவுடன் சென்ற ஷிவானி நாராயணன்.!

பள்ளி ஆண்டு விழாவில் செம்ம cute ஆக ஆடிய மைனா மகன்.! விசில் சத்தத்தால் அதிர்ந்த அரங்கம்.! 3

விளம்பரம்

இந்த தம்பதிகளுக்கு துருவ் என்கிற மகன் இருக்கிறார். துருவ் பெயருக்கு ஏற்றார் போல துரு துருவென இருக்கும் ஒரு குழந்தை. இவர் செய்யும் சேட்டைகளையும் குறும்புகளையும் அடிக்கடி வீடியோக்களாக எடுத்து இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் மைனா் தற்போது துருவின் பள்ளி ஆண்டு விழாவிற்காக அவரை தயார் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் மைனா் சமத்தாக உட்கார்ந்து மேக்கப் போட்டுக் கொண்டு பின்னர் மேடையில் சென்று நடனமாடி இருக்கிறார் மைனாவின் மகன் துருவ். மேலும் சிறப்பு விருந்தினராக அதே பள்ளிக்குச் சென்ற மைனா முதல் இருக்கையில் அமர்ந்து கொண்டு மகன் ஆடுவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த அழகான வீடியோவை மைனாவே வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..!கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Myna Wings

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment