புதிதாக வீடு வாங்கி கிரஹபிரேவசம் செய்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.! இதோ ஆல்பம்.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தற்போது சென்னையில் மிக பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். அதன் கிரகப்பிரவேச புகைப்படங்களை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது சின்னத்திரை உலகில் கலக்கி வருபவர் நடிகை சுஜிதா 1998 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்கிற சீரியல் மூலமாக அறிமுகமானார். மலையாளத்தில் ஒளிபரப்பான சொந்தம் மல்லுட்டி என்கிற நாடகத்தின் மூலமாக ஹீரோயினாக அவதாரம் எடுத்த அவர், அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கணவருக்காக என்கிற சீரியலின் மூலமாக பல மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நாடகங்களில் நடித்து வருகிறார்.

புதிதாக வீடு வாங்கி கிரஹபிரேவசம் செய்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.! இதோ ஆல்பம்.! 1
இது மட்டுமில்லாமல் சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கெடுத்து இருக்கிறார். மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார் சுஜிதா. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்கிற தொடரில் தனம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனது கணவருக்கு மூன்று தம்பிகள் இருக்கிறார்கள், திருமணம் ஆகி வீட்டிற்கு வரும் தனம் 3 குழந்தைகளையும் பார்த்துக் கொள்வதற்காக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார். கடைசியில் தம்பிகள் அனைவரும் வளர்ந்து திருமணம் ஆகி அவர்களுக்கே குழந்தை வந்துவிட்ட நிலையில் குழந்தை இல்லாமல் அவதிப்படுகிறார் தனம். பின்னர் அவரும் ஒரு கட்டத்தில் கர்ப்பம் ஆகிறார். தற்போது கதைப்படி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் தனம். அவருடன் சேர்ந்து அவரின் கொழுந்தன் மனைவிகளும் கர்ப்பமாக இருக்கிறார்கள். தற்போது இந்த கதை சற்று விமர்சனங்களுடன் போய்க் கொண்டிருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  நன்றி ஜோ.! எனக்கு அனைத்தையும் கொடுத்தது அந்த படம் தான்.! ஜோதிகாவிடம் உருகிய சூர்யா.!

புதிதாக வீடு வாங்கி கிரஹபிரேவசம் செய்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.! இதோ ஆல்பம்.! 3
இரண்டாவது தம்பியாக இருக்கும் ஜீவா குடும்பத்துடன் கோபித்துக்கொண்டு தற்போது வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.நான்காவது தம்பியாக இருக்கும் கண்ணனும் குடும்பத்திலிருந்து வெளியேற இருக்கிறார் என்று தெரிகிறது. இந்த நிலையில் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், சுஜிதா தற்போது சென்னையில் புது வீடு ஒன்றை வாங்கி கட்டி இருக்கிறார்.அந்த ஆல்பம் புகைப்படங்களை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

புதிதாக வீடு வாங்கி கிரஹபிரேவசம் செய்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.! இதோ ஆல்பம்.! 5
தற்போது சுஜிதா தமிழில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரிலும், தெலுங்கில் வண்டினம்மா, மௌன ராகம் ஆகிய தொடர்களிலும், கீதாஞ்சலி என்கிற தொடரிலும் நடித்து வருகிறார். அவருக்கு விளம்பரப் படங்களை இயக்கும் இயக்குனர் தனுஷ் என்பவருடன் திருமணமானது. அவர்களுக்கு தன்வின் என்கிற மகனும் இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுஜிதா தற்போது தனது வீட்டின் கிரகப்பிரவேச புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. சுஜிதாவின் ரசிகர்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  மீனாவுக்கு அடிபட்டதை பார்த்து துடித்து போன விஜயா..! அதை கண்டு அதிர்ந்து போன முத்து..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

விளம்பரம்

Leave a Comment