பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாக இருக்கும் நிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக அனைவரும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை புரிந்துள்ளனர். அப்போது திருஷாவும் ப்ளூ நிற ஆடையில் வருகை புரிந்திருந்தார். மேலும் அங்கு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த சிம்மாசனம் ஒன்றில் அமர்ந்து அவர் போஸ் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழில் அமைந்த பிரம்மாண்ட நாவலான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் மணிரத்தினம் ஈடுபட்டிருந்தார். இரண்டு பாகங்களாக உருவாகியிருந்த இந்த படத்தின் இரண்டாவது பாகம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் இன்று இரவு 9:30 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் படத்தில் இருந்து அகநக என்கிற பாடலும் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தில் இலங்கையில் தனியாக மாட்டிக் கொள்ளும் இராஜராஜ சோழன் எப்படி மீண்டு வருகிறார்? அவர் இருந்த கப்பல் உடைந்து அவர் கடலுக்குள் மூழ்கி போயிருந்தது, அப்போது அரண்மனையில் இருக்கும் நந்தினியை போலவே ஒரு பெண் உருவம் ஊமை ராணி கடலுக்குள் குதித்து அருள்மொழி வர்மனை காப்பாற்ற முயற்சி செய்கிறார். அந்த ஊமை ராணி யார்..? அவர் ஏன் தஞ்சாவூரில் இருக்கும் பழுவூர் ராணி நந்தினி போலவே உருவத்தில் இருக்கிறார்..? அவர் ராஜராஜ சோழனை கடலில் இருந்து காப்பாற்றினாரா..? என்பதெல்லாம் தெரியாமல் முதல் பாகம் நிறைவடைந்தது. இந்த நிலையில் மக்கள் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக மும்முரமாக பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது படத்தில் இருந்து ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது.
With his gracious smile and charm, our #PonniyinSelvan @actor_jayamravi is at the #PS2AudioLaunch#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #PS2Trailer #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial pic.twitter.com/SzYDP3DmMt
— Lyca Productions (@LycaProductions) March 29, 2023
She conquered the seas, now she is here to conquer your hearts. Our Samuthirakumari #AishwaryaLekshmi #PonniyinSelvan2 #PS2 #PS2Trailer #PS2AudioLaunch #CholasAreBack#ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/kaGsfIYmSv
— Lyca Productions (@LycaProductions) March 29, 2023
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் வருகை தந்துள்ளனர். சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் வருகை தந்திருக்கிறார். வருகை தந்த அனைவரும் அங்கு போடப்பட்டிருக்கும் சிம்மாசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். தற்போது அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயம் ரவி, திரிஷா, பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Tips Tamil