இவன் ஒரு ரவுடி சார்.! கான்ட்ராக் எடுக்க வந்த இடத்தில் அர்ஜுன் செய்த மோசடி.! அடி மேல் அடி வாங்கும் தமிழ்.!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது தமிழுக்கு கிடைக்க இருந்த காண்ட்ராக்டை அர்ஜூன் கெடுத்து விடுகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஆரம்பத்தில் வித்தியாசமான கதைக் களத்துடன் ஆரம்பித்தது. படிக்காத சரஸ்வதி எம் பி ஏ முடித்திருப்பதாக கூறி தமிழை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் இது ஒரு கட்டத்தில் தமிழின் தாயார் கோதைக்கு தெரிய வருகிறது. தனக்கு படித்த மருமகள் தான் வேண்டும் என்று இவ்வளவு நாள் எதிர்பார்த்து இருந்த கோதைக்கு, சரஸ்வதி படிக்காதவர் என்று தெரிந்த போது பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்போது தமிழ் சரஸ்வதியை மிகுந்த கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். சரஸ்வதியும் படித்து தற்போது டிகிரி வரை முடித்திருக்கிறார். இந்த நிலையில் கதை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது. தமிழின் தங்கை ராகிணி அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் அர்ஜூனுக்கும் தமிழின் குடும்பத்திற்கும் ஏற்கனவே பழைய குடும்ப பகை இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவன் ஒரு ரவுடி சார்.! கான்ட்ராக் எடுக்க வந்த இடத்தில் அர்ஜுன் செய்த மோசடி.! அடி மேல் அடி வாங்கும் தமிழ்.! 1

விளம்பரம்

இந்தப் பகைக்கு பழிவாங்குவதற்காக தமிழின் தங்கை ராகிணியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் அர்ஜுன். திருமணம் முடிந்து அர்ஜுன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தமிழின் வீட்டிலேயே வசித்து வருகின்றனர். தற்போது கதையின் திடீர் திருப்பமாக தமிழ், அவரது தம்பி கார்த்தி, மருமகன் அர்ஜுன் ஆகிய மூவரில் ஒருவருக்கு கோதை நடத்திவரும் கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சேர்மன் பதவியை தருவதற்காக டாஸ்குகள் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் எப்படியாவது தமிழை குடும்பத்திலிருந்து பிரித்து விட வேண்டும் என்று எண்ணும் அர்ஜூன் தன்னை தமிழில் கத்தியால் குத்தி விட்டார் என்று பொய் சொல்லி தமிழை வீட்டில் இருந்து கோதையே வெளியேற்றும்படி செய்து விட்டார். தற்போது சரஸ்வதி உடன் தனியாக வசித்து வரும் தமிழ், எப்படியாவது ஒரு லேத் பட்டறையை உருவாக்கி அதில் கான்ட்ராக்ட்களை எடுத்து வேலை செய்து கோதை இண்டஸ்ட்ரிஸ்க்கு நிகராக பெரிய ஆளாக வரவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  டேய் புகழ் ஏன்டா பொண்ணுங்கள்ட்ட இப்படி கடலை போடுற? புகழை திட்டிய ஹன்சிகா.!

இவன் ஒரு ரவுடி சார்.! கான்ட்ராக் எடுக்க வந்த இடத்தில் அர்ஜுன் செய்த மோசடி.! அடி மேல் அடி வாங்கும் தமிழ்.! 3

விளம்பரம்

இதற்காக பல இடங்களில் அவர் அணுகி வேலை கேட்டு வருகிறார். இந்த நிலையில் ஒரு கம்பெனிக்கு வேலை கேட்டு செல்லும் அவரிடம் வேலை கொடுப்பவர் என்னிடம் கான்ட்ராக்ட் கொடுப்பதற்கு வேலை இல்லை, அடியாள் வேலை வேண்டுமானால் இருக்கிறது வரியா? என்று தமிழை கோபம் கிளப்புமாறு கேள்வி கேட்கிறார். இதனால் கடுப்பான தமிழ் அந்த உரிமையாளரின் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். அப்போது அங்கு வரும் அர்ஜூன் நான் சொன்னேன் இல்லையா சார், இவன் ஒரு ரவுடி பய, இவனுக்கு கான்ட்ராக்ட் கொடுக்காதீர்கள் என்று தமிழுக்கு எதிராக அப்படியே திசை திருப்பி விடுகிறார். இதனால் அந்த கான்ட்ராக்ட் கொடுப்பவரும் அர்ஜீன் பேச்சை நம்பி தமிழை வெளியே செல்லுமாறும், உங்களுக்கெல்லாம் கான்ட்ராக்ட் கொடுக்க முடியாது என்று சொல்லியும் அனுப்பி விடுகிறார். தொடர்ந்து தமிழுக்கு அர்ஜுன் தொல்லை மேல் தொல்லை கொடுத்து வருகிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment