பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கள் பாடலாக வீரா ராஜா வீரா என்கிற பாடல் வெளியாகி இருக்கிறது. பொன்னியின் செல்வனுக்கும் வானதிக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளை மையமாக வைத்து இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. பொன்னியின் செல்வன் என்பது தமிழில் அமைந்த மிகப்பிரமாண்டமான நாவல். ஐந்து பாகங்களாக உருவாகியிருந்த இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் யாராலும் நிகழ்த்த முடியாத சாதனையை தற்போது இயக்குனர் மணிரத்தினம் செய்து காட்டியிருக்கிறார். விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் என மிகப் பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்து இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார் மணிரத்தினம். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. இரண்டாவது பாகம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வரும் நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான வீரா ராஜா வீரா என்கிற பாடல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அகநக என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தப் பாடலும் வெளியான சில நிமிடங்களில் பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி இருக்கிறது. முதல் பாகத்தில் இலங்கையிலிருந்து திரும்பும் வழியில் வந்தியத்தேவன் மற்றும் அருள்மொழி வர்மன் ஆகியோர் ஒரு கப்பலில் மாட்டிக்கொள்ள, அங்கு மிகப்பெரிய சண்டை நடக்கிறது. பின்னர் மின்னல் தாக்கி கப்பல் இரண்டாக உடைந்து கடலுக்குள் சென்று விடுகிறது. கடலுக்குள் சென்ற அருள்மொழி வர்மரை மீட்க நந்தினி போலவே உருவம் கொண்ட பெண் ஒருவர் கடலில் குதித்து அவரைக் காப்பாற்ற முயல்கிறார். அவர் ஊமை ராணி தான், ஆனால் அவர் எப்படி நந்தினியின் உருவத்தை போலவே இருக்கிறார் என்ற பல கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளது.

இதற்கெல்லாம் விடை அளிக்கும் விதமாக படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இது பல எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் அடுத்த பாடலாக இருக்கும் வீரா ராஜா வீரா என்கிற மெலடி பாடல் வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!
Youtube Video Embed Credits: Tips Tamil