அப்பன் மவனே வாடா..! மகன் பிறந்து இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் அறிவித்த அஸ்வின் கக்குமானு.!

நடிகர் அஸ்வின் கக்குமானுக்கு தற்போது இரண்டாவது ஆக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உருக்கமாக பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஸ்வின் கக்குமான். இவர் முதன்முதலாக 2011 ஆம் ஆண்டு வெளியான நடுநிசி நாய்கள் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் போலீசாக நடித்திருந்தார். மேலும் சூர்யாவுடன் ஏழாம் அறிவு, விஜய் சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கார்த்தியின் பிரியாணி போன்ற படங்களில் நடித்திருந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு வெளியான மேகா என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருந்தார். இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற விட்டாலும் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அப்பன் மவனே வாடா..! மகன் பிறந்து இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் அறிவித்த அஸ்வின் கக்குமானு.! 1

விளம்பரம்

தொடர்ந்து சில ஹிந்தி படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். மேலும் வேதாளம் படத்தில் நடிகர் அஜித்தின் தங்கையை காதலிக்கும் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சேந்தன் அமுதன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உண்மையில் சேந்தன் அமுதன் “உத்தம சோழன்” என்று ராஜராஜசோழனுக்கு முன்பாக அரியணை ஏறிய ஒரு மன்னர் ஆவார். இந்த படத்தில் சிறந்த வரவேற்பை பெற்று இருக்கிறார் அஸ்வின். தற்போது இவர் நடிப்பில் பீட்சா 3 திரைப்படம் தயாராகி இருக்கிறது. மேலும் தொலைக்காட்சி, இது வேதாளம் சொல்லும் கதை போன்ற சில படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் அஸ்வின் கக்குவான் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவருக்கு இரண்டாவதாக மகன் பிறந்திருக்கும் செய்தியை அறிவித்திருக்கிறார்.

தொடர்புடையவை  படத்தில் காவி கொடியை பறக்கவிட்ட மணிரத்னம் ஒரு ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்..மணிரத்னத்தை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை

அப்பன் மவனே வாடா..! மகன் பிறந்து இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் அறிவித்த அஸ்வின் கக்குமானு.! 3
கடந்த 2016 ஆம் ஆண்டு சோனாலி என்பவரை திருமணம் செய்து கொண்ட அஸ்வினுக்கு அவிரா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி அஸ்வின் சோனாலி ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்றும் பிறந்திருக்கிறது. குழந்தையின் புகைப்படங்களை பகிர்ந்த அஸ்வின் ஏப்ரல் இரண்டாம் தேதியன்று நாங்கள் ஒரு ஆண் குழந்தையை வரவேற்றோம். குழந்தையும் தாயும் நலமுடன் இருக்கின்றனர். அவிரா தற்போது அக்கறை உள்ள சகோதரியாகவும், அவரது தாய் சோனாலி ஒரு சூப்பர் ஹீரோவாகவும் மாறி இருக்கின்றனர். அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த உலகில் கருணையுடன் இருங்கள் என்று அவர் பதிவிட்டிருக்கிறார். அஸ்வினுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்..!

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Ashwin Kakumanu (@ashwinkakumanu)

விளம்பரம்

Leave a Comment