ஆலியாவை கொஞ்சி தீர்க்கும் சஞ்சீவ்.! மனுஷன் செம்ம ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காரே.!

ஆல்யா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் ஆகிய இருவரும் இணைந்து மாலத்தீவில் செம க்யூட்டாக ரொமான்ஸ் செய்திருக்கின்றனர். அந்த வீடியோவை தற்போது ஆலியாவே வெளியிட்டு இருக்கிறார். வீடியோவின் முடிவில் தனது மனைவிக்கு லிப் டூ லிப் முத்தமும் கொடுத்திருக்கிறார் சஞ்சீவ்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாக தொடங்கி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் கார்த்திக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகர் சஞ்சீவ். இவர் அதற்கு முன்பாக குளிர் 100 டிகிரி என்கிற படத்திலும் நடித்திருக்கிறார். வெள்ளித்திரை பெரிய அளவில் கை கொடுக்காததால் சின்ன திரைக்கு மாறிய அவர், முதல் சீரியலிலேயே பல மக்களின் அன்பைப் பெற்றார். தொடர்ந்து காற்றின் மொழி போன்ற சீரியல்களில் நடித்த அவர் விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவிக்கு மாறினார். தற்போது கயல் என்கிற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலியாவை கொஞ்சி தீர்க்கும் சஞ்சீவ்.! மனுஷன் செம்ம ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காரே.! 1
ராஜா ராணி சீரியல் தன்னுடன் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சஞ்சீவ் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஆலியாவின் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார் ஆலியா. இந்த தம்பதிகளுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இருவரும் செய்யும் சேட்டைகளை வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர் ஆலியா-சஞ்சீவ் தம்பதிகள். இந்த வீடியோக்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தனது இளைய மகன் அர்ஷ் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக் கொண்டு மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார் சஞ்சீவ். அங்கு கேக் வெட்டியும் மாலத்தீவில் கடற்கரையில் இரவு நேர பார்ட்டி வைத்தும் அசத்தியிருந்தார் சஞ்சீவ்.

விளம்பரம்
தொடர்புடையவை  TRP-ல் வாங்கிய பலத்த அடி, எண்ணி ஒரு மாதத்தில் சீரியலை முடித்து என்டு கார்டு போட்ட கலர்ஸ் டிவி

ஆலியாவை கொஞ்சி தீர்க்கும் சஞ்சீவ்.! மனுஷன் செம்ம ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காரே.! 3
அந்த வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை தாண்டிய நிலையில் தற்போது தனது மனைவி ஆலியாவுடன் ரொமான்ஸ் செய்யும் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் சஞ்சீவ். அதில் செல்லமே படத்தில் வரும் பாடல் ஒன்றே அப்படியே ரீ் கிரியேட் செய்து ஆலியாவுடன் ரொமான்ஸ் செய்துள்ளார். மேலும் தனது காதல் மனைவிக்கு லிப் டூ லிப் முத்தமும் கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment