ஆலியா மானசாவின் மகள் தற்போது ஆலியாவிற்கு காய்ச்சல் அடிப்பதால் அவரை தாய்போல் இருந்து கவனித்துக் கொள்கிறார். அவருக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தும், மாத்திரை எடுத்துக் கொடுத்தும் அவரை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறார். அந்த அழகிய வீடியோவை தற்போது ஆலியா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்கிற சீரியலின் மூலமாக தமிழ் திரையுலகத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஆலியா மானசா. இவர் அதற்கு முன்பாக மானாட மயிலாட என்கிற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். பின்னர் ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கும் நடிகர் சஞ்சீவுக்கும் காதல் மலர, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆலியா குடும்பத்தில் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை் இருப்பினும் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி சஞ்சீவை கரம் பிடித்திருந்தார் ஆலியா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு சஞ்சீவுடன் இணைந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ஆலியா. தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சஞ்சீவும் சன் தொலைக்காட்சியில் கயல் என்கிற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த காதல் தம்பதிகளுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இருவரும் பார்ப்பதற்கு மிக அழகாக பொம்மை போல் இருப்பார்கள். இவர்கள் செய்யும் சேட்டைகளை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர் ஆலியா மற்றும் சஞ்சீவ் தம்பதிகள். தற்போது மூத்த மகள் ஐலா நன்றாக வளர்ந்து விட்டார். அவர் தற்போது நன்றாக பேசத் தொடங்கி இருக்கிறார். அவரது வீடியோக்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தங்களது youtube சேனலில் இன்று ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கின்றனர் ஆலியா சஞ்சீவ் தம்பதிகள்.

அதில் ஆலியாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் அவர் கட்டிலில் படுத்து இருக்கிறார். அவருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தும், மாத்திரை கொண்டு வந்து கொடுத்தும் ஒரு தாய் போல் இருந்து கவனித்துக் கொள்கிறார் ஐலா. இதை பார்த்த பலரும் ஐலா இப்பொழுதே தனது அம்மாவை தாய் போல பார்த்துக் கொள்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sanjiev & Alya