நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக் ஆக இருக்கும் கிசி கா பாய் கிசுகி ஜான் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு அஜித் மற்றும் சிவா கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் தான் வீரம். இந்த படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. பாக்ஸ் ஆபிஸில் வசூலிலும் கலக்கு கலக்கியிருந்தது காமெடி, ஆக்சன், காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு படமாக இந்த படம் அமைந்திருந்தது. சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை இந்த படத்தை பார்த்து ரசித்திருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேங்ஸ்டர் மற்றும் ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த தல அஜித் குமார் முழுவதும் தனது கெட்டப்பை மாற்றி கிராமத்து கெட்டப்பில் வேஷ்டி சட்டை உடன் படம் முழுவதும் தோன்றியிருந்தார். இதையடுத்து இதே திரைப்படம் தெலுங்கில் கட்டமராயுடன் என்ற பெயரில் ரீமேக் ஆக வெளியானது. அதில் தல அஜித் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்திருந்தார். தமிழைப் போலவே தெலுங்கிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலை குவித்திருந்தது. இதனால் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இந்த படத்திற்கு கிசிகி பாய் கிசிகி ஜான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சல்மான் கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டீசர் வெளியான போது தமிழ் ரசிகர்கள் பலராலும் இதே விமர்சிக்கப்பட்டது. வீரம் படத்தின் சாயல் கொஞ்சம் கூட இந்த படத்தில் இல்லை என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

நீளமான முடியை வைத்துக்கொண்டு சல்மான் கான் தூணையே உதைத்து உருட்டி விடுவது, காரை பறக்க விடுவது போன்ற காட்சிகள் விமர்சனத்திற்கு உள்ளாகின. கிராமத்துக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்த வீரம் படத்திற்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று பலரும் டீசரை கலாய்த்து வந்த நிலையில். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் டிரைலரை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Salman Khan Films