சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு.! நமீதா வெளியிட்ட வீடியோவால் எழுந்த சர்ச்சை.! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!

நமீதா தற்போது தமிழ் புத்தாண்டு குறித்து பேசி இருக்கும் காணொளி ஒன்றை இணையத்தில் வைரலாகி இருக்கும் நிலையில் நமிதாவிற்கு எதிராக சிலர் தற்போது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குஜராத்தில் பிறந்துவிட்டு தமிழர்களுக்கு பாடம் எடுப்பதா என்று கமெண்டில் நமீதாவை திட்டி தீர்த்து வருகின்றனர். தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை நமீதா. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே குஜராத்தில் தான். படத்தில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார் இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா என்கிற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். வந்த குறுகிய காலத்திலேயே சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார், அஜித் என பலருடனும் நடித்திருக்கிறார். இவரின் மகா நடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், ஆணை, பச்சை குதிரை, அழகிய தமிழ் மகன், நான் அவன் இல்லை, பில்லா போன்ற படங்கள் குறிப்பிட தகுந்த படங்களாக இருக்கின்றன. பின்னர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு.! நமீதா வெளியிட்ட வீடியோவால் எழுந்த சர்ச்சை.! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.! 1

விளம்பரம்

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்திருக்கிறார். பின்னர் 2017 ஆம் ஆண்டு வெளியான பிக் பாஸ் சீசன் 1-லும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். ஆனால் மொழி சரியாக புரியாத காரணத்தினாலும், அடிக்கடி சண்டை பிரச்சனைகள் என இருந்த காரணத்தினாலும் மக்கள் இவரை குறைவான வாக்குகளை அளித்து வெளியே அனுப்பினர். பின்னர் இவர் தயாரிப்பாளர் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார் இவருக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தது. இந்த நிலையில் இன்று நமீதா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் பெருமைமிக்க பாரத நாட்டில் வாழ்கின்ற தொன்மையான தமிழர்களாகிய நமது புத்தாண்டு என்பது வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தான். நிச்சயமாக ஜனவரி 1 புத்தாண்டு கிடையாது. அது நமது கலாச்சாரமே கிடையாது. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று அவர் அந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

தொடர்புடையவை  உள்ளூர் சேனலில் பரப்பப்படும் தர்பார்

சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு.! நமீதா வெளியிட்ட வீடியோவால் எழுந்த சர்ச்சை.! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.! 3

விளம்பரம்

இதைப் பார்த்த பலர் நமீதாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் தை ஒன்று தான் தமிழ் புத்தாண்டு என்று கூறி வரும் நிலையில், திராவிடர்களுக்கு தான் தை ஒன்று புத்தாண்டு, ஆனால் தமிழர்களுக்கு சித்திரை ஒன்று தான் தமிழ் புத்தாண்டு என்று பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ தமிழர்களுக்கு தை ஒன்றுதான் தமிழ் புத்தாண்டு என்றும் பதிவிட்டு வருகின்றனர். நமீதாவின் இந்த பதிவு தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. நமீதா ஜனவரி 1 புத்தாண்டு கிடையாது ஏப்ரல் 14 தான் தமிழ் புத்தாண்டு என்று கூறியிருப்பது அவர் இருக்கும் பாஜக கட்சியின் நிலைப்பாடு என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றார். மேலும் குஜராத்தில் பிறந்துவிட்டு தமிழ் வருடப்பிறப்பு பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறாயா? என்றும், ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுவது போல இருக்கிறது என்றும் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

தொடர்புடையவை  கடலுக்கு நடுவே நடந்த ஷூட்டிங்..! BOAT படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment