எப்படி இருக்கிறது ருத்ரன் திரைப்படம்.! முழு திரைவிமர்சனம் இதோ.!TamilGlitz Rating (?/5)

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ருத்ரன் திரைப்படம் குறித்த விமர்சனங்களை தற்போது பார்க்கலாம். ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், நாசர், காளி வெங்கட், சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் கதிரேசன் முதல் முறையாக இயக்கியிருக்கிறார். நான்கு வருடங்களுக்கு பின்னர் ராகவா லாரன்ஸின் படம் இன்று திரையரங்குகளில் வெளியானதால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம். ருத்ரன் என்கிற கதாபாத்திரத்தில் வருகிறார் ராகவா லாரன்ஸ். இவர் தனது தந்தை நாசர் மற்றும் தாய் பூர்ணிமா பாக்யராஜ் உடன் வாழ்ந்து வருகிறார். தந்தை மற்றும் தாய் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார். இந்த சமயத்தில் ருத்ரனின் தந்தை நாசருக்கு ஒரு பிரச்சனை வருகிறது.

எப்படி இருக்கிறது ருத்ரன் திரைப்படம்.! முழு திரைவிமர்சனம் இதோ.!TamilGlitz Rating (?/5) 1
தனது நண்பனுக்காக 6 கோடி ரூபாய் கடனாக வாங்குகிறார் நாசர். ஆனால் அந்த நண்பர் காசை வாங்கிவிட்டு நாசரை ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார். இதனால் கடனை திரும்ப கொடுக்க முடியாமல் நண்பனின் துரோகத்தை தாங்க முடியாமலும் மனம் உடைந்து போன நாசர் ஒரு கட்டத்தில் இறந்து விடுகிறார். நாசர் இறப்பிற்கு பின்னர் அவர் வாங்கிய 6 கோடி கடனை வட்டியுடன் ஏழு கோடியாக திருப்பி கொடுக்க வேண்டும் என்று மகன் ருத்ரனிடம் கடன் கொடுத்தவர் திருப்பிக் கேட்க, அவரும் தந்தை நடத்தி வந்த நிறுவனத்தை விற்று மூன்று கோடி ரூபாயை முதல் தவணையாக கொடுத்து விடுகிறார். பின்பு மீதம் இருக்கும் நான்கு கோடி கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் ருத்ரனுக்கு, அதிக சம்பளத்துடன் வெளிநாட்டில் வேலை கிடைக்கிறது. இதனால் குடும்பத்தை விட்டு வெளிநாடு செல்லும் சூழல் ஏற்படுகிறது. இதற்கிடையே பல ஆண்டுகளாக காதலித்து வந்த பிரியா பவானி சங்கரையும் அவர் திருமணம் செய்து கொள்கிறார். மனைவி மற்றும் தாயை விட்டுவிட்டு வெளிநாடு செய்கிறார் ருத்ரன்.

விளம்பரம்
தொடர்புடையவை  தரமான சம்பவம் செய்துள்ள ராகவா லாரன்ஸ்.! "சந்திரமுகி 2" படத்தின் ட்ரைலர் இதோ. !

எப்படி இருக்கிறது ருத்ரன் திரைப்படம்.! முழு திரைவிமர்சனம் இதோ.!TamilGlitz Rating (?/5) 3

ஆறு வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் ருத்ரன். மீண்டும் திரும்பி சென்னைக்கு வரும் நேரம் பார்த்து அவரது தாய் பூர்ணிமா மரணம் அடைந்து விடுகிறார். அந்த சமயத்தில் அவரது மனைவி பிரியா பவானி சங்கரும் காணாமல் போய்விடுகிறார். ருத்ரனின் தாய் பூர்ணிமா எப்படி இறந்தார்? பிரியா பவானி சங்கருக்கு என்ன நடந்தது. அவர் எப்படி காணாமல் போனார்.? இதையெல்லாம் ருத்ரன் கண்டுபிடித்து எதிரிகளை பழி வாங்கினாரா? என்பது தான் இந்த படத்தில் மீதிக்கதை் இதில் ஹீரோவாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் எமோஷன், ஆக்ஷன், ரொமான்ஸ், டான்ஸ், அம்மா சென்டிமென்ட் என்று அனைத்து விதமான நவரசங்களையும் காட்டும் நாயகனாக நடித்திருக்கிறார். பிரியா பவானி சங்கரின் காதல் மற்றும் எமோஷன் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அம்மாவாக நடித்திருக்கும் பூர்ணிமா பாக்கியராஜ் சென்டிமென்ட் காட்சிகளில் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டார். லாரன்ஸ் மற்றும் பூர்ணிமாவின் இடையேயான அம்மா – மகன் பாசம் காட்சிகள் நம் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  அஜித்தின் வலிமை படத்தைப்பற்றி முக்கிய அறிவிப்பு

எப்படி இருக்கிறது ருத்ரன் திரைப்படம்.! முழு திரைவிமர்சனம் இதோ.!TamilGlitz Rating (?/5) 5
நண்பனாக நடித்திருக்கும் காளி வெங்கட்டின் நடிப்பு மிக அருமை. வில்லனாக சரத்குமார் மிரட்டி எடுத்துள்ளார். இந்த படத்தில் கமர்சியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஆனால் ஆக்ஷன் காட்சிகள் மட்டும் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக இருக்கிறது. 70 பேரை கூட அசால்ட் ஆக அடித்து துவம்சம் செய்கிறார் ராகவா லாரன்ஸ். இதெல்லாம் டூ மச் லிஸ்டில் வந்து சேர்கிறது. ஜிவி பிரகாஷின் இசை ஓகே, மாஸ் வசனம் என்கிற பெயரில் சில காட்சிகள் க்ரிஞ்சாக அமைந்திருக்கிறது. வழக்கமாக லாரன்ஸின் படங்களில், வில்லன்களை லாரன்ஸ் உடம்பில் இருக்கும் பேய் வந்து பழிவாங்கும். ஆனால் தனது குடும்பத்தை அழித்தவர்களை தானே முன் நின்று பழிவாங்குகிறார். இதுதான் மற்ற லாரன்ஸின் படங்களுக்கும் ருத்ரன் படத்திற்கும் இடையேயான ஒரே ஒரு வித்தியாசம். ஃபேமிலியோடு ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்கும் அளவிற்கு இந்த படம் அமைந்திருக்கிறது. முதன்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் தயாரிப்பாளர் கதிரேசன் தன் சொல்ல வந்த கதைக்களம், சொல்ல வந்த கருத்து இரண்டையும் அழகாக கூறியிருக்கிறார். ஆனால் திரைக்கதையில் ஏற்பட்ட சுணக்கம் பார்வையாளர்களின் பொறுமையை ஒரு கணம் சோதித்துவிட்டது.

தொடர்புடையவை  பிரம்மாண்ட சாதனை படைத்த சிறகடிக்க ஆசை..! விஜய் டிவியே வெளியிட்ட புகைப்படம்..!

எப்படி இருக்கிறது ருத்ரன் திரைப்படம்.! முழு திரைவிமர்சனம் இதோ.!TamilGlitz Rating (?/5) 7
நம்ப முடியாத சண்டை காட்சிகள், மாஸ் வசனங்கள் என்கிற பெயரில் க்ரிஞ்ச், அரைத்த மாவையே அரைத்து சலித்து போன பழி வாங்கும் கதைகள், இது அனைத்தையும் தவிர்த்து விட்டு பார்த்தால் படம் ஓரளவிற்கு ஒரே ஒரு முறை பார்க்க முடியும் என்ற அளவில் தான் இருக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவை ஓகே. பாடல்கள் படத்திற்கு ஓரளவிற்கு கை கொடுத்திருக்கின்றன. குறிப்பாக கிளைமாக்ஸ் பாடல் ஓரளவிற்கு பலமாக அமைந்திருக்கிறது. இந்த படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2.5/5

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment