விஜய் டிவியின் மூன்று முக்கிய தொடர்களின் நேரத்தை தற்போது விஜய் டிவி மாற்றி அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பல ஓடாத சீரியல்களின் நேரத்தை குறிப்பாக ப்ரைம் டைமான 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடர் சரியாக ஓடாத காரணத்தினால் தற்போது அந்த நிகழ்ச்சியை வேறு டைமிற்க்கு மாற்றி அமைத்திருக்கின்றனர். அந்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சன் டிவிக்கு போட்டியாக பல நல்ல தொடர்களை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல்தான் தொடர்ந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது. அதே நேரத்தில் மற்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அந்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. குறிப்பாக விஜய் டிவியில் ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா, பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

பாரதி கண்ணம்மா சீசன் 1 மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தொடர்ந்து சீசன் 2 எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நாள் கழித்துதான் சீசன் 2 ஒளிபரப்பாகும் என்று பலரும் எண்ணி இருந்த நிலையில் திடீரென அடுத்த வாரமே சீசன் 2வை ஒளிபரப்ப தொடங்கியிருந்தனர். இதில் ஹீரோவாக சன் தொலைக்காட்சியில் ரோஜா சீரியலில் நடித்து வந்த சிபு சூரியன் நடித்த தொடங்கினார். ஹீரோயினாக வினுஷா தேவியை தொடர்ந்தார். இருப்பினும் முதல் சீசன் கொடுத்த அளவிற்கு இந்த தொடர் வரவேற்பு பெறவில்லை. சீரியல் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகியும் பெரிய அளவிலான வரவேற்பு இல்லை. இதனால் பாரதி கண்ணம்மா சீரியலை பிரைம் டைமில் இருந்து தூக்கி இருக்கிறது விஜய் டிவி. இனி பாரதிகண்ணம்மா சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதேபோல் சிறகடிக்க ஆசை தொடர் இரவு 9 மணிக்கும் மகாநதி தொடர் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

விஜய் டிவி ரசிகர்கள் பலரும் பாரதி கண்ணம்மா சீரியலின் நேரத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அவர்களின் கோரிக்கைக்கு விஜய் டிவி செவி சாய்த்து இருக்கிறது. கடந்த நான்கு வருடங்களாக 9 மணியான ப்ரைன் டைமை பிடித்து வைத்திருந்த பாரதி கண்ணம்மாவை தற்போது பத்து மணிக்கு தூக்கி அடித்திருப்பது பாரதி கண்ணம்மா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தபோதிலும் சிறகடிக்க ஆசை, மகாநதி போன்ற தொடர்கள் தற்போது தான் ஒளிபரப்பாக தொடங்கியிருந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த மாற்றத்தை விஜய் டிவியின் ரசிகர்கள் பலரும் வரவேற்று இருக்கின்றனர்.
View this post on Instagram