திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் நடிகை இலியானா.! குவியும் வாழ்த்துக்கள்.!

திருமணமே ஆகாமல் நடிகை இலியானா தற்போது கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். இலியானா கடந்த 2006 ஆம் ஆண்டு தேவதாசு என்கிற தெலுங்கு படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார். அதே ஆண்டில் தமிழில் வெளியான கேடி திரைப்படத்தில் ஆர்த்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். நடிகர் ரவி கிருஷ்ணா, தமன்னா, இலியானா ஆகிய மூன்று பேரின் நடிப்பில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் நடிகை இலியானா.! குவியும் வாழ்த்துக்கள்.! 1

விளம்பரம்

தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2011 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தின் மூலமாக மீண்டும் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் இவருக்கு பெரிய அளவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நண்பன் படத்திற்கு பின்னர் பல ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்.

தொடர்புடையவை  மஞ்சரி அருண் இடையே உருவாகிய மோதல்..! Bigg Boss Promo..!

திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் நடிகை இலியானா.! குவியும் வாழ்த்துக்கள்.! 3

விளம்பரம்

தற்போது முழுவதுமாக கோலிவுட் எண்டு கார்டு போட்டுவிட்டு ஹிந்தி படங்களில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார். கவர்ச்சி வேடங்களில் நடித்து அடுத்தடுத்த வாய்ப்புகளை தட்டி தூக்கி வருகிறார். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக பிட்புல் என்கிற படம் வெளியாகி இருந்தது. தற்போது அன்ஃபேர் அண்ட் லவ்லி என்கிற படத்தில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ என்பவரை இலியானா காதலித்து வந்தார்.

திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் நடிகை இலியானா.! குவியும் வாழ்த்துக்கள்.! 5

விளம்பரம்

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2019-ம் ஆண்டு இருவரும் லவ் பிரேக்கப் செய்து அவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் இலியானா. இந்த நிலையில் இலியானா தற்போது கத்ரீனா கைப்பின் சகோதரர் செபாஸ்டின் உடன் காதலில் விழுந்துள்ளதாக தெரிகிறது. மாலத்தீவில் இருவரும் டேட்டிங் செய்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.

தொடர்புடையவை  நடிகையாக அறிமுகம் ஆகும் குஷ்பூ மகள்..உடல் எடையை குறைத்து வேற லெவல் Transformation | Kushboo Sundar

திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் நடிகை இலியானா.! குவியும் வாழ்த்துக்கள்.! 7

விளம்பரம்

ஆனால் செபாஸ்டின் உடனான காதல் குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருக்கிறார் இலியானா. ஒரு சின்ன குழந்தையின் டீசர்டில் புதிய பயணம் தொடங்கி இருக்கிறது என்று பகிர்ந்து இருந்தார். மற்றொரு புகைப்படத்தில் செயினில் மம்மா என்கிற எழுத்துக்களுடன் அதை அணிந்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் நடிகை இலியானா.! குவியும் வாழ்த்துக்கள்.! 9

விளம்பரம்

மேலும் அந்த பதிவில் விரைவில் வரவுள்ள எனது குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். இலியானாவின் இந்த பதிவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் வழக்கம் போல் நெட்டிசன்கள் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமானது குறித்து கேள்விகளும் எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment