விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் அனைவரும் வந்திருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியின் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஸ்டார்ட் மியூசிக். இந்த நிகழ்ச்சியை கடந்த மூன்று சீசன்களாக பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பாட்டுகளில் வரும் வரிகளை நீக்கிவிடுவர். அதை போட்டியாளர்கள் சரியாக பாட வேண்டும். அப்படி பாடும் டீம் லக்கி அறைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் பணப்பெட்டிகளை எடுத்து வர வேண்டும் அதில் பணம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். உள்ளே எவ்வளவு பணம் இருக்கிறதோ அது அந்த டேமில் இருக்கும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும். இதுதான் இந்த நிகழ்ச்சியின் டெம்ப்ளேட்டாக இருந்து வருகிறது. மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்த இந்த நிகழ்ச்சி, நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் விஜய் டிவியை சேர்ந்தவர்களே அதிகமாக பங்கெடுத்து வருவது வழக்கமாக இருக்கிறது. இந்த வாரம் ஈரமான ரோஜாவே சீசன் 2 வின் நடிகர்கள் விருந்தினர்களாக வந்திருக்கின்றனர். ஈரமான ரோஜாவே சீசன் 2வில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் நடித்து வருகிறார். காவியா கதாபாத்திரத்தில் கேப்ரியல்லாவும் ,ஜீவா கதாபாத்திரத்தில் நடிகர் திரவியமும், பிரியா கதாபாத்திரத்தில் நடிகை சுவாதியும் நடித்து வருகின்றனர். பல விமர்சனங்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நாடகம் தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. விரைவில் இந்த நாடகம் முடிவுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது கதைப்படி ஜோடிகள் மாறி திருமணம் செய்து கொண்டனர். பார்த்திபன் மற்றும் காவியா இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கை தொடங்கி இருக்கின்றனர். அதேபோல் மற்றோரு ஜோடிகளாக இருக்கும் ஜீவா மற்றும் பிரியா இருவரும் தங்களது வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.

கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது நாடக குழுவினர் அனைவரும் பிரியங்கா நடத்தி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றனர். இங்கு வந்துள்ள அவர்கள் பிரியா மற்றும் காவியா இருவரும் ஒரு அணியினராகவும் சித்தார்த் மற்றும் திரவியம் மற்ற அணியினராகவும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television