பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு கோபியின் வீட்டிற்கு வந்த ராதிகாவிற்கும் ஈஸ்வரிக்கும் தற்போது கடுமையான வாக்குவாதம் எழுந்திருக்கிறது. ஈஸ்வரி ராதிகாவிடம் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு ராதிகாவும் பதிலுக்கு பதில் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி தொடரில் அடுத்த விறுவிறுப்பான கட்டங்கள் நடைபெற்று வருகிறது. அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு ரோட்டில் கிடக்கும் கோபியிடம் அவர் தாயார் உண்மையிலேயே கரிசனம் கொள்கிறார். மேலும் கோபியை தங்களது வீட்டிற்க்கே திரும்பி வந்து விடுமாறும் அழைத்து வருகிறார். இதற்கிடையில் ஒரு நாள் ரோட்டில் குடித்துவிட்டு கிடக்கும் கோபியை மீட்டு அவரது மகன் செழியன் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். வீட்டில் உள்ள கோபியின் அருகில் கோபியை படுக்க வைத்து இருக்கின்றனர். அவர் ஒரு இரவு முழுவதும் பாக்யாவின் வீட்டிலேயே தூங்கி விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவரது இரண்டாவது மனைவி ராதிகாவிற்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. மேலும் ராதிகாவின் தாயார் கோபி இருக்கும் இடத்தில்தான் நீயும் இருக்க வேண்டும் ,பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு கோபி இருக்கும் வீட்டிற்கு சென்று விடு என்று ஐடியா கொடுக்கிறார். இதனால் பெட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு பாக்யாவின் வீட்டிற்கு வரும் ராதிகா தற்போது வீட்டில் உள்ள அனைவரிடமும் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். வீட்டிற்கு உள்ளே வந்த ராதிகாவிடம் ஈஸ்வரி நீ எதற்கு இங்கே வந்தாய்? என்ற கேள்வி எழுப்புகிறார். மேலும் கையில் இருக்கும் பெட்டியை பார்த்ததும் கோபியின் துணிமணிகளை எடுத்து வந்து விட்டாயா? நானே யாரையாவது அனுப்பி பெட்டி படுக்கைகளை எடுத்து வரச் சொல்லலாம் என்று இருந்தேன், நல்ல வேளை நீயே எடுத்து வந்து விட்டாய் என்று கூறுகிறார். இதனால் கோபமடையும் ராதிகா நான் இனிமேல் இங்கேதான் இருக்கப் போகிறேன் என்கிற அதிர்ச்சி செய்தியை கூறுகிறார்.

இதைக் கேட்டு வீட்டில் உள்ள ஈஸ்வரி மற்றும் கோபி உட்பட அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக பாக்யா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். மேலும் கோபி இருக்கும் இடத்தில் தான் நான் இருப்பேன், நான் எதற்காக வெளியே போக வேண்டும்? என்று வீட்டில் உள்ள அனைவரிடமும் சண்டை போடுகிறார் ராதிகா. வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபி ராதிகாவை சமாதானப்படுத்தி நீ போ ராதிகா நான் வருகிறேன் என்று சொல்கிறார். ஆனால் அவர் கேட்பதாக தெரியவில்லை. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television