உயிரை கையில புடிச்சு பாத்துட்டு இருந்தேன்.! வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கை காய்ச்சி எடுத்த ப்ளூ சட்டை.!

வீரம் படத்தின் ரீமேக்காக சல்மான் கான் நடித்துள்ள கிசிகா பாய் கிசிகி ஜான் படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். இந்த படம் பற்றி அவர் கூறிய விமர்சனம் ஆவது தமிழில் எடுக்கப்பட்ட வீரம் திரைப்படமானது, ஹீரோ மற்றும் அவரது நான்கு தம்பிகள் பற்றியதாகும். நான்கு தம்பிகளும், நான்கு பெண்களை காதல் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் அண்ணனுக்கு திருமணம் ஆனால்தான் தங்களுக்கு திருமணமாகும் என்று சொல்லி ஹீரோயின் ஒருவரை அண்ணனை பற்றி சொல்லி அவருடன் கோர்த்து விடுவார்கள். ஹீரோயினுக்கு வயலன்ஸ் என்றாலே பிடிக்காது. ஆனால் ஒரு கட்டத்தில் ஹீரோ அடிதடிகளில் இறங்குபவர் என்று ஹீரோயினுக்கு தெரிய வருகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை. ஆனால் இந்தப் படத்தை சூப்பர் படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓகே வான ஒரு படம் தான். பொழுதுபோக்கு எமோஷனல் என்று அனைத்தும் கலந்த படமாக வீரம் படம் இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உயிரை கையில புடிச்சு பாத்துட்டு இருந்தேன்.! வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கை காய்ச்சி எடுத்த ப்ளூ சட்டை.! 1
ஆனால் சல்மான் கான் நடித்திருந்த இந்தி படம் ஆரம்பம் முதலே எமோஷனை போட்டு பிழிந்து இருப்பார்கள். இந்த படத்தில் ஹீரோவிற்கு மூன்று தம்பிகள். அண்ணன் எப்படி போனால் எனக்கு என்ன. என்று சொல்லிவிட்டு மூன்று பேரும் மூன்று பெண்களை காதலித்துக் கொண்டிருப்பார்கள். அப்பொழுது ஒரு கிழவரிடம் சென்று அண்ணனைப் பற்றி கூறும் பொழுது, அவர் உங்கள் அண்ணன் எப்படிப்பட்டவர் என்று தெரியுமா? உங்களை அனாதை ஆசிரமத்தில் இருந்து வளர்த்து வந்தார்கள் என்று கிழவன் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அப்போது தொடங்கி உயிரை கையில் பிடித்துக் கொண்டு இந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். படம் ஃபுல்லா செட்டு போட்டு வச்சிருக்கானுங்க. மெட்ரோ ரயில் மெட்ரோ ஸ்டேஷன், உள்ளிட்டவர்களை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். குரூப் டான்ஸ் ஆட சொன்னால் கூட்டம் கூட்டமாக ஆடிக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு பிரேமுக்கு உள்ளேயும் ஆயிரம் பேர் ஆடிக்கிட்டு இருக்கான்.

விளம்பரம்
தொடர்புடையவை  2 கோடி மதிப்புள்ள Bullet Proof கார் வாங்கிய சல்மான் கான்..! பாதுகாவலர்கள் உடன் நடைபெற்ற பிக் பாஸ் 18 படப்பிடிப்பு..!

உயிரை கையில புடிச்சு பாத்துட்டு இருந்தேன்.! வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கை காய்ச்சி எடுத்த ப்ளூ சட்டை.! 3
இந்தப் படத்தில் ஜெகபதிபாபுவை வில்லனாக காட்டுகிறார்கள். அவனுக்கு மேல் வில்லனாக இன்னொருவனை காட்டுகிறார்கள். அவன் நடிப்பை பார்த்தால் ஜெகபதிபாபுவே எவ்வளவோ தேவலாம என்று சொல்லும் அளவிற்கு அந்த வில்லன் இருக்கிறான். ஹீரோ சூப்பர் ஹீரோ மாதிரி மேலிருந்து குதிக்கிறார். ஹல்க் மாதிரி காரை தூக்கி பக்கத்தில் போடுகிறார். வீரம் படத்தை ரீமேக் செய்கிறேன் என்று செய்துவிட்டு Spoof செய்து வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே சல்மான் கான் சாம்பார் வாளியை தூக்கிக் கொண்டு நடப்பது போல் நடக்கிறார் என்று பேசியதால் சல்மான் கான் கன்னிகள் என்னை போன் செய்து ஹிந்தியில் திட்டினார்கள். ஆனால் இந்த படத்தின ஹீரோயின் தற்போது அதே போல் சல்மான் கானை நக்கல் அடித்தும், அவர் நடப்பது போல் நடந்து காண்பித்துக் கொண்டிருக்கிறார். அந்த ஹீரோயினை என்ன பாடுபடுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை என படத்தை கிழி என கிழித்தெடுத்து விட்டார் அந்த விமர்சன வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

விளம்பரம்

Leave a Comment