புரட்சி தளபதி விஷாலின் தெறி நடிப்பில் “மார்க் ஆண்டனி” படத்தின் டீசர் வெளியானது.! இதோ டீசர் வீடியோ.!

நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது இந்த டீசர். அன்பானவன் அசராதவன் அடங்காதவன், திரிஷா இல்லனா நயன்தாரா, பஹீரா போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன். இவர் தற்போது நடிகர் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். மினி ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிந்த நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியிருந்தனர். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புரட்சி தளபதி விஷாலின் தெறி நடிப்பில் "மார்க் ஆண்டனி" படத்தின் டீசர் வெளியானது.! இதோ டீசர் வீடியோ.! 1
இன்று மாலை டீசர் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று காலை தளபதி விஜய் படக்குழுவினர் நேரில் சந்தித்து அவருக்கு டீசரை போட்டு காண்பித்துள்ளனர். டீசரை வெகுவாக பாராட்டிய தளபதி விஜய் விரைவில் விஷாலின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் உறுதியளித்து இருக்கிறார். இது குறித்து பேசிய விஷால், “தன்னுடைய இயக்குனர் ஆசை நீண்ட இடைவெளிக்கு பின்னர் துப்பறிவாளன் 2 படம் மூலமாக நிறைவேறி இருக்கிறது, இன்று விஜயை சந்தித்தபோது அவரிடம் உங்களுக்காக இரண்டு கதைகள் தேர்வு செய்து வைத்திருப்பதாக சொன்னேன், அதற்கு அவர், நீங்கள் வாங்க நண்பா பார்த்துக்கலாம், நான் இருக்கிறேன் சேர்ந்து படம் பண்ணலாம்” என்று கூறியதாக விஷால் பேசியிருந்தார். இதனால் விஷால் விரைவில் தளபதியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் தற்போது அறிவித்தபடி படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். 80 மற்றும் 90 காலக் கட்டத்தில் இருந்த கேங்ஸ்டர் குழுவை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருப்பதாக தெரிகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  விஜய் சேதுபதியின் DSP படத்தின் இரண்டாவது சிங்கிள் "அன்னபூரணி" பாடல் வெளியானது.!

புரட்சி தளபதி விஷாலின் தெறி நடிப்பில் "மார்க் ஆண்டனி" படத்தின் டீசர் வெளியானது.! இதோ டீசர் வீடியோ.! 3
விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் நன்றாக ஓடவில்லை. குறிப்பாக மிகவும் எதிர்பார்த்த லத்தி திரைப்படம் நன்றாக ஓடவில்லை. சமீப காலமாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வரும் விஷால் தற்போது வழக்கமான ஒன்றை மாற்றி வித்தியாசமான கதையம்சத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் டீசரைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment