பொன்னியின் செல்வன் பாகம் 2 எப்படி இருக்கு? படம் நல்லா இருக்கா இல்லையா? பொதுமக்கள் விமர்சனம்.!

பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் தற்போது மிகப்பிரமாண்ட முறையில் இந்தியா முழுவதும் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து தற்போது பொதுமக்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். பாகம் ஒன்றுக்கு கிடைத்த அளவிற்கு கூட பாகம் இரண்டிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. பலரும் பாகம் ஒன்றைக் காட்டிலும் பாகம் இரண்டு சுமாராக இருக்கிறது என்ற கருத்தையே கூறி வருகின்றனர். சிலர் படம் மிக நன்றாக இருப்பதாக கூறிய போதிலும் புத்தகம் படித்த பலரும் படம் நன்றாக இல்லை என்றும், முதல் பாகத்தில் இருந்த அளவிற்கான பிரம்மாண்டம் கூட இரண்டாவது பாகத்தில் இல்லை என்றும், விக்ரமிற்காக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழில் அமைந்த மிகப் பிரம்மாண்ட நாவல் தான் பொன்னியின் செல்வன். ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் ஐந்து பாகங்களாக இந்த நாவல் வெளியாகி இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் பாகம் 2 எப்படி இருக்கு? படம் நல்லா இருக்கா இல்லையா? பொதுமக்கள் விமர்சனம்.! 1

விளம்பரம்

பல கதாபாத்திரங்களுடன் மிகப்பிரமாண்டமாக அமைந்த இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு தோற்றுப் போயிருந்தனர். ஆனால் மணிரத்னம் இந்த நாவலை படமாக்கி சாதனை புரிந்திருந்தார். முதல் பாகமானது பல திருப்புமுனைகளுடன் நிறைவடைந்து இருந்தது. அந்த அனைத்து முடிச்சுகளும் இரண்டாம் பாகத்தில் அவிழ்க்கப்பட்டிருக்கிறது. கடலுக்குள் விழுந்த அருள்மொழி வர்மரை காப்பாற்றும் ஊமை ராணி யார்? அவர் ஏன் நந்தினியின் உருவத்தை போலவே இருக்கிறார்? காஞ்சிபுரத்திலிருந்து கடம்பூர் மாளிகைக்கு வரும் ஆதித்த கரிகாலனை நந்தினி கொலை செய்தாரா? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கும் படமாக இந்த இரண்டாம் பாகம் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் தற்போது படம் பற்றி தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர். பெரும்பாலானோர் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற கருத்தையே முன்வைத்து வருகின்றனர். நாவலில் இருந்தது போல் அல்லாமல் சில மாற்றங்களை செய்திருப்பது படத்தின் சுவாரஸ்யத்தை குறைத்து இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்தனர்.

தொடர்புடையவை  ஜிபி முத்து அப்பா மாதிரி.! ஜிபி முத்துவை அழ வைத்த தனலட்சுமியை வெளுத்து வாங்கிய ஜனனி

பொன்னியின் செல்வன் பாகம் 2 எப்படி இருக்கு? படம் நல்லா இருக்கா இல்லையா? பொதுமக்கள் விமர்சனம்.! 3

விளம்பரம்

தற்போது பொதுமக்கள் கூறிய முழு விமர்சன வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Bingoo Box

விளம்பரம்

Leave a Comment