ஜீவாவை பயங்கரமாக அசிங்கப்படுத்தும் மாமனார்.! மிகவும் அவமானமாக உணரும் ஜீவா வெளியேறுவாரா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா தற்போது அவரது மாமனாரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார். இனி எந்த முடிவு எடுத்தாலும் தன்னிடம் கேட்காமல் எடுக்க கூடாது என்று ஜீவாவை அவரது மாமனார் ஜனார்த்தனன் மிரட்டி வைக்கிறார். இதனால் மிகவும் அவமானமாக உணரும் ஜீவா, என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விறுவிறுப்பான கட்டங்களை எப்படி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் பல நடிகர்கள் மாறிவிட்டனர். இருந்த போதும் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக இது இருப்பதால் நான்கு ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு பிடித்த தொடராக இருந்து வருகிறது. இந்தத் தொடரில் தற்போது தனம், முல்லை ஐஸ்வர்யா என மருமகள்கள் அடுத்தடுத்து கர்ப்பமாக இருக்கிறார்கள். இது சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் தற்போது கதையை வேறு களத்திற்கு மாற்றி இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீவாவை பயங்கரமாக அசிங்கப்படுத்தும் மாமனார்.! மிகவும் அவமானமாக உணரும் ஜீவா வெளியேறுவாரா? 1

விளம்பரம்

அண்ணன் தம்பிகளிடம் மனஸ்தாபம் கொள்ளும் ஜீவா தற்போது வீட்டிலிருந்து வெளியேறி தனது மாமனார் ஜனார்த்தனன் வீட்டில் வசித்து வருகிறார். ஜனார்த்தனன் தீடீரென நல்லவர் போல மாறிவிடுகிறார். திடீரென கெட்டவராக மாறிவிடுகிறார். இதனால் அவரின் குணத்தை புரிந்து கொள்ள முடியாமல் ஜீவா தவித்து வருகிறார். மேலும் தனது சொத்து அனைத்தையும் மகள் பெயரில் எழுதாமல் மருமகன் ஜீவா பெயரில் எழுதி இருக்கிறார் ஜனார்த்தனன். இது ஜீவாவிற்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜனார்த்தனன் நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட்டிற்கு அரிசி சப்ளை செய்யும் நபரை இனி அரிசி சப்ளை செய்ய வேண்டாம் என்று ஜீவா கூறி இருக்கிறார். அது குறித்து ஜனார்த்தனன் ஜீவாவிடம் கேள்வி எழுப்பி வருகிறார். எதற்காக அப்படி செய்தீர்கள் என்று ஜீவாவிடம் கேட்க, அவர் கொடுக்கும் அரிசியில் நிறைய கல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வருகிறது அதனால் தான் அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று ஜீவா பதிலளிக்கிறார்.

தொடர்புடையவை  தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடிகை நளினிக்கு நடந்த சம்பவம்.! அதிர்ச்சியில் உறைந்து போன நளினி.!

ஜீவாவை பயங்கரமாக அசிங்கப்படுத்தும் மாமனார்.! மிகவும் அவமானமாக உணரும் ஜீவா வெளியேறுவாரா? 3
இனிமேல் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் என்னிடம் கேட்காமல் எடுக்க கூடாது என்று ஜீவாவை மிரட்டுகிறார் அவரது மாமனார். பின்னர் அரிசி சப்ளை செய்த நபரை போலீஸ் தேடுகிறது என்கிற செய்தி ஜனார்த்தனனுக்கு கிடைக்கிறது. அப்போது அவர் ஜீவாவிடம் வந்து நல்ல வேலை நீங்கள் அவரை அரிசி சப்ளை செய்ய வேண்டாம் என்று நிறுத்தி விட்டீர்கள் என்று கூறுகிறார். அப்போது அதேபோல் மசாலா வினியோகம் செய்பவரும் இதுபோலத்தான் செய்கிறார் என்று ஜீவா கூற, ஒருத்தர் தவறு செய்தார் என்பதற்காக எல்லோரையும் சந்தேகப்படாதீர்கள் என்று மீண்டும் ஜீவாவை அசிங்கப்படுத்துகிறார் ஜனார்த்தனன். மாமனாரால் தொடர்ந்து அசிங்கப்படுத்தப்படும் ஜீவா அந்த வீட்டில் இருப்பாரா இல்லை மீண்டும் தனது அண்ணனை புரிந்து கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment