என் பொண்டாட்டிகிட்ட நீ ஏன்டா பேசுற.? பழனிச்சாமி வீட்டிற்கே சென்று சண்டை போட்ட கோபி..!

பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யாவிடம் நெருங்கி பழகும் பழனிச்சாமியிடம் சென்று சண்டை போடுவதற்காக கோபி நேராக பழனிச்சாமியின் வீட்டிற்கே சென்று விடுகிறார். அங்கு அவர் பழனிச்சாமியுடன் மோதலில் ஈடுபடுகிறார். ஆனால் பழனிச்சாமி “உன் வேலையை பார்த்துக்கொண்டு போயா” என்று சொல்லி கோபியை பயங்கரமாக அசிங்கப்படுத்துகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாக இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் மற்றும் இளைஞர்கள் என்று பலரும் பார்த்து ரசிக்கும் ஒரு தொடராக இது இருந்து வருகிறது. இதில் கதாநாயகன் கோபிக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி பாக்கியா. பாக்யாவிற்கு திருமணம் ஆன இரண்டு மகன்களும், 12ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கோபி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் பொண்டாட்டிகிட்ட நீ ஏன்டா பேசுற.? பழனிச்சாமி வீட்டிற்கே சென்று சண்டை போட்ட கோபி..! 1

விளம்பரம்

ராதிகாவை திருமணம் செய்த நாள் தொடங்கி அவருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. மன நிம்மதிக்காக அவர் அளவுக்கு அதிகமாக குடிக்கத் தொடங்குகிறார். இதனால் கோபியின் தாயார் கவலை கொண்டு, கோபியை மீண்டும் தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். இதை தெரிந்து கொண்ட இரண்டாவது மனைவியை ராதிகாவும் கோபி இருக்கும் இடத்தில் தான் நானும் இருப்பேன் என்று சொல்லி பாக்யாவின் வீட்டிற்கு வந்து விடுகிறார். இதற்கிடையில் பாக்யா ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு பழனிசாமி என்பவரிடம் நல்ல நட்பு ஏற்படுகிறது. இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். பழனிச்சாமிக்கு வயதான நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதை தெரிந்து கொள்ளும் பாக்கியா அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். ஆனால் இதை தவறாக புரிந்து கொள்ளும் கோபி பாக்யாவுடன் தான் பழனிச்சாமிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்.

தொடர்புடையவை  மனோஜுக்கு சரக்கை ஊற்றி விட்ட பிரவுன் மணி.! போதை தலைக்கேறி உளறித் தள்ளும் ரோகிணி மாமா.!

என் பொண்டாட்டிகிட்ட நீ ஏன்டா பேசுற.? பழனிச்சாமி வீட்டிற்கே சென்று சண்டை போட்ட கோபி..! 3

விளம்பரம்

மேலும் பழனிச்சாமி பாக்யாவுடன் நெருங்கி பழகுவதை கோபி விரும்பவில்லை. இதனால் அவர் தற்போது பழனிச்சாமியின் வீட்டிற்கு நேராக செல்கிறார். அங்கு பழனிச்சாமியிடம் அவர் என் மனைவியுடன் நீ எதற்காக பேசுகிறாய்? என்று கோபத்துடன் கேட்கிறார். இதற்கு பதில் அளிக்கும் பழனிசாமி ஆங்கிலத்தில் “உன் வேலையை பார்த்துக் கொண்டு போயா” என்று பதில் அளிக்கிறார். இதனால் கோபி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment