குறும்பா என் உயிரே நீதான்டா..! மகனின் 13வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜெயம் ரவி.!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி தனது மகன் ஆரவின் 13-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். தனது குடும்பத்துடன் மகனின் பிறந்த நாளை கொண்டாடிய ஜெயம் ரவியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் எடிட்டராக வலம் வந்தவர் மோகன். அவர் தன்னுடைய இளைய மகன் ரவியை ஜெயம் என்கிற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆக்கினார். 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

குறும்பா என் உயிரே நீதான்டா..! மகனின் 13வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜெயம் ரவி.! 1

விளம்பரம்

முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதால் ரவி “ஜெயம் ரவியாக” மாறிப் போயிருந்தார். அன்று தொடங்கி இன்று வரை ஜெயம் ரவி 20 ஆண்டுகளாக பல வெற்றி படங்களில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இவர் ராஜராஜ சோழனாக அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த கதையின் கதாநாயகனாக ஜெயம் ரவி நடித்திருந்தார்.

தொடர்புடையவை  ஹண்டர் வந்துட்டார் சூடுடா.. வெறித்தனமாக வெளியாகிய Vettaiyan படத்தின் Second single வெளியாகியது..!

குறும்பா என் உயிரே நீதான்டா..! மகனின் 13வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜெயம் ரவி.! 3

விளம்பரம்

பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் ஜெயம் ரவி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தற்போது அவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது கைவசம் இறைவன், சைரன் மற்றும் பெயரிடப்படாத கிருத்திகா உதயநிதியின் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தனது முப்பதாவது படமான ஜெ ஆர் 30 என்கிற படத்திலும் அவர் நடித்து வருகிறார். இதில் இறைவன் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து படம் வெளியிட்டுக்கு தயாராகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் அகமது இயக்கியிருக்கிறார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

குறும்பா என் உயிரே நீதான்டா..! மகனின் 13வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜெயம் ரவி.! 5

விளம்பரம்

மேலும் சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் எம். ராஜேஷ் இயக்கும் படத்தில் பிரியங்கா மோகனுடன் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. மேலும் இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனர் ஒருவர் இயக்க இருக்கும் ஜீனி என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படி படங்களில் பிசியாக நடித்து வரும் ஜெயம் ரவி, தற்போது தனது குடும்பத்துடனும் அப்போது நேரம் செலவிட்டு வருகிறார். அந்த அழகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவது வழக்கமாக இருக்கிறது. சமீபத்தில் கூட தன்னுடைய மனைவியின் பிறந்த நாளை கொண்டாடி அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார் ஜெயம் ரவி.

தொடர்புடையவை  CWC ஜோயா கட்டி இருக்கும் புது வீடு..! அவரே வெளியிட்டு உள்ள புகைப்படங்கள்..!

குறும்பா என் உயிரே நீதான்டா..! மகனின் 13வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜெயம் ரவி.! 7

விளம்பரம்

ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். முதல் மகன் பெயர் ஆரவ், இரண்டாவது மகன் பெயர் அயான். இந்த நிலையில் ஜெயம் ரவி இன்று மீண்டும் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதில் அவரது மூத்த மகன் ஆரவ்வின் 13வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு இருக்கிறது.

குறும்பா என் உயிரே நீதான்டா..! மகனின் 13வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜெயம் ரவி.! 9

விளம்பரம்

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஜெயம் ரவியின் தந்தை, தாய் அவரது சகோதரர், சகோதரர் மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த புகைப்படங்களை தற்போது ஜெயம் ரவி பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது. மேலும் ஜெயம் ரவிக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கிறார்களா? என்று பலரும் ஆச்சரியத்துடன் அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.!

விளம்பரம்

Leave a Comment