“உங்கள நினச்சு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு” தனது ரசிகருக்கு கைப்பட கடிதம் எழுதியுள்ள தளபதி.!

தனது பிறந்த நாளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டி தனது கைப்பட தளபதி எழுதி இருக்கும் கடிதம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது தனது 67வது படமான ,”லியோ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் திரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். முதல் கட்டப் பிடிப்பை காஷ்மீரில் முடித்த படக் குழு, தற்போது இறுதி கட்டப்பட பிடிப்பிற்காக ஹைதராபாத்திற்கு சென்று இருக்கின்றனர். இங்கு சில பாடல் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டாக வெளிவர தொடங்கி இருக்கிறது. முதல் சிங்கிள் பாடலான “நா ரெடி தான்” பாடல் பல மக்கள் மனங்களில் உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்கிறது.

தொடர்புடையவை  கையில் துப்பாக்கி, தலையில் ர த் த காயம்.! கேப்டன் மில்லர் First லுக் போஸ்டர் வெளியானது.!

"உங்கள நினச்சு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" தனது ரசிகருக்கு கைப்பட கடிதம் எழுதியுள்ள தளபதி.! 1

விளம்பரம்

இதற்கிடையில் விஜய் தனது 68வது படத்தில் வெங்கட் பிரபுவுடன் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில் கடந்த ஜூன் 17ஆம் தேதி நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், ஊக்கத்தொகை அளித்தும், பொன்னாடை போர்த்தியும் கௌரவப்படுத்தி இருந்தார் விஜய். 1339 மாணவர்களுக்கு இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருந்தது. அங்கு வந்த அனைவருக்கும் மதிய உணவும் தயார் செய்யப்பட்டு இருந்தது. மாணவர்களிடையே பேசிய விஜய் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசியிருந்தார். ஓட்டு போடுவதற்கு பணம் வாங்கக்கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறிய விஜயின் இந்த பேச்சு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில் தற்போது ரசிகழ் மன்ற நிர்வாகிகளுக்கு தனது கைப்பட விஜய் எழுதிய கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  பிரின்ஸ் படத்தின் First சிங்கிள் பிம்பிலிக்கா பிளாப்பி பாடல் வெளியானது..செம்ம குத்து சாங் யா

"உங்கள நினச்சு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" தனது ரசிகருக்கு கைப்பட கடிதம் எழுதியுள்ள தளபதி.! 3
அந்த கடிதத்தில், “அன்புடையீர் வணக்கம், கடந்த ஜூன் 22 அன்று எனது பிறந்த நாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை நான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அறிந்தேன். உங்களது இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி, பிரியமுடன் விஜய் என்று கையொப்பமிட்டு தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்காக அந்த கடிதத்தை எழுதி இருக்கிறார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் மன்ற நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு உதவும் வகையில் பல நலத்திட்ட பணிகளை செய்திருந்தனர் .அதற்காக தற்போது நன்றி தெரிவித்து விஜய் தனது கைப்பட இந்த கடிதத்தை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment